பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவன் தந்திரன், வைராஹா வை, ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது முருகதாஸ் தயாரிப்பில் ‘ஆகஸ்ட் 16,1947’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படங்களில் நடிக்குறார்.
ரங்கூன் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக வந்து கதாநாயகியாக வளர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். ‘கலியுஞ்சல்’ படத்தில் ஆரம்பித்து பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் விபின் மோகன் மற்றும் நடனக் கலைஞர் கலமண்டலம் கிரிஜா ஆகியோரின் மகளாவார். மஞ்சிமா மோகன் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து உள்ளார்.
ரங்கூன் படத்தில் ஜோடியாஜ நடித்தபோது கவுதம், மஞ்சிமா இடையே நட்பு மலர்ந்தது. அது நெருக்கமாகி காதலாக மாறியது. இருவீட் சம்மத்தத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நவம்பர் 28-ம் தேதி இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண் டனர்.
previous post
