Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவுதம்- மஞ்சிமா காதல் திருமணம்

பிரபல நடிகர் கார்த்திக் மகன் நடிகர் கவுதம் கார்த்திக். இவர்,  வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர்.

மஞ்சிமா மோகன், சுந்தர புருஷன்,  அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக், .மஞ்சிமா  மோகன் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும்  நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அந்த காதலுக்கு   இருவீட்டாரும் பச்சை கொடி காட்டினார்கள். இருவீட்டார்  சம்மதத்துடன்  இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.இம்மாதாம் (நவம்பர் ) 28ம் தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

திருமணம் குறித்து அறிவிக்க இருவரும் இன்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகை, மீடியா நிருபர்களை சந்தித்தனர். அப்போது  கவுதம் கார்த்திக் கூறியதாவது:

நானும் மஞ்சுவும்  தேவராட்டம் படத்தில் நடித்தபோது எங்களுக்குள்  நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு  நான்தான் அவரிடம் காதலை  சொன்னேன். அதற்கு பதில் சொல்ல இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.  பின்னர் என் காதலை ஏற்றுக்கொண்டார்.

நான் சோர்வாகும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் அளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று ஊக்கம் தருவார். அவரது அன்பும் எதையும் துணிச்சலாக அணுகும்  தனித்தன்மையும் என்னை கவர்ந்தது. எங்கள் காதலுக்கு என் தந்தை வாழ்த்து சொன்னார்.

எங்கள்  திருமணம் வரும் 28ம் தேதி சென்னையில் எளிய. முறையில் குடும்பத்தினர் பங்கேற்க நடக்கிறது. திருமண வரவேற்பு எதுவும் இல்லை. எங்களது காதல் விஷயம் அறிந்து சிம்பு வாழ்த்து சொன்னார். தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் இணைந்து நடித்து வருகிறேன்.

இவ்வாறு கவுதம் கார்த்திக் கூறினார்.

மஞ்சுமா கூறும்போது,”குடும்பத் தினர் சம்மதத்துடன்  எங்கள் திருமண. நடக்கிறது. என் குடும்பத்தினருக்கு கவுதமை  நன்கு பிடித்திருக்கிறது. 28 ம் தேதி காலை  எங்கள் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நடக்கிறது.  திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். வாய்ப்பு கிடைத்தால் கவுதமுடன் சேர்ந்து நடிப்பேன்” என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை  பி ஆர்  ஒ சுரேஷ் சந்திரா, நாசர்  வரவேற்றனர்.

 

Related posts

சென்னையில் புதுமை இசை நிகழ்ச்சி RRR

Jai Chandran

POWER Song From Suriya-Starrer JAI BHIM is out!

Jai Chandran

Kuzhali wins 3 awards at Mokkho Film Festival

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend