Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்

தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு பாணி வகுத்து நடித்தவர் கிருஷ்ணா. 1970களில் தொடங்கி 2000ம் வரை சுமார் 350 படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடனடியாக டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தொடர்ந்து மோசமானதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது.  ஆனால் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை அவர் மரணம்  அடைந்தார்.

மறைந்தநடிகர்  கிருஷ்ணா தெலுங்கு திரையுலகில் பல புதுமைகளை  அறிமுகம் செய்தார். முதல் சினிமாஸ்கோப், முதல் 70 எம் எம், முதல் டி டி எஸ்  என நவீன பாணிகளை அறிமுகப்படுத்தி னார். போலீஸ், சி ஐடி, பக்தி படம், குடும்ப படம்  என பல வித கதாபாத்திரங்கள் ஏற்று நடித்ததுடன், ஹாலிவுட் பாணியில் கவ்பாய் பட பாணியையும் அறிமுகப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் அரசியலில் இணைந்து எம் பி ஆக பதவி வகித்தார். மேலும் பத்ம பூஷன் விருதும், அந்திர  மாநில அரசின் நந்தி விருதும் பெற்றுள்ளார். அல்லூரி சீதராமராஜு படத்திற் காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும்  பெற்றார்.
கிருஷ்ணா 1942 ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 79.

கிருஷ்ணாவுக்கு 2 மகன்கள்,  3 மகள்கள் உள்ளனர். இவரது மகன் மகேஷ்பாபு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.. மூத்தமகன் ரமேஷ்பாபு ஏற்கனவே இறந்துவிட்டார்.

கிருஷ்ணா உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கன ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related posts

ஜோரா கைய தட்டுங்க (பட விமர்சனம்)

Jai Chandran

ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படம்

Jai Chandran

Suriya”s Etharkkum Thunindhavan Third Look

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend