Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்: முதல்வர் வாழ்த்து

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 ம் தேதி கொண்டாடப்பட்டது.
அவரது ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும்  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நற்பணி உதவிகள் செய்தும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
கமல்ஹாசன் தயாரித்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் இந்தாண்டில் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்ததுடன் கமலின் இந்த பிறந்தநாளை சாதனை பிறந்தநாளாகவும் கொண்டாடினார்கள்.
கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற் றெடுத்த பெருங் கலைஞனே வாழிய நின் கலைத்திறம்.
இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என ஏராளமா னோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

ஜெய்ப்பூர் திரைப்பட விழா டிரெய்லர்

Jai Chandran

தமிழ் திரைப்பட நடப்பு விநியோகள்தர்கள் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் வாழ்த்து

Jai Chandran

கோவா திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend