Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பேய காணோம் படத்தை வாங்கிய ஹைகிரியேட்டர்ஸ்

ஹாரர் கலந்த  நகைச்சுவை திரைப்படம் பேய காணோம் “
மீரா மிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கி குளோபல் எண்டெர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.ஆர். சுருளிவேல்  தயாரிப்பில்  ஹாரர் கலந்த  நகைச்சுவை திரைப்படம் பேய காணோம் “
இந்த திரைப்படத்தை ஹை கிரியேட்டர்ஸ்  ( HI CREATORS ) நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறார்கள். பேய காணோம் படத்தின் ஆடியோ உரிமையையும் ஹை கிரியேட்டர்ஸ்  நிறுவனமே வாங்கியது எங்கள் படத்திற்கு கிடைத்த பெரிய பலம் என்கிறார்கள் தயாரிப்பாளரும் , இயக்குனரும்.
படம் அடுத்த மாதம் திரையரங்கு களில் வெளியிட இருக்கிறார்கள்.  மேலும் பேயகாணோம் படத்தை அடுத்து சிறந்த சிறிய பட்ஜெட்  படங்களை ஹை கிரியேட்டர்ஸ்  நிறுவனம் வெளியிட உள்ளார்கள்.
வாழ்க்கையில் ஜெயிக்க போராடும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை தரும் பாடலாக இந்த படத்தில் இடம்பெறும் ” இது என் கொடி பறக்கும் நேரம் ” என்ற பாடல் இருக்கும். தற்போது அந்த பாடல் ஹை கிரியேட்டர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது அனைவரும் கண்டு மகிழலாம்.

Related posts

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்..

Jai Chandran

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல்

Jai Chandran

15வருடம் திரை பயணம்: நடிகர் கார்த்தி நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend