Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிரின்ஸ் (பட விமர்சனம்)

படம்: பிரின்ஸ்

நடிப்பு: சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி

தயாரிப்பு: சுரேஷ்புரடக்‌ஷன்

இசை: எஸ்.தமன்

ஒளிப்பதிவு : மனோஜ் பரம்ஹம்சா

இயக்கம்: அனுதீப் கே.வி.

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D One)

தேவனாம்கோட்டையில் உள்ளது பிரெஞ்சு காலனி. அங்குள்ள பள்ளியில் அன்பு (சிவகார்த்தி கேயன்) சோஷியல் ஆசிரியராக இருக்கிறார். அந்த பள்ளிக்கு ஆங்கில டீச்சராக வருகிறார் பிரிட்டிஷ் பெண் ஜெசிகா ( மரியா). அவரை கண்டதும் காதல் கொள்கி றார் அன்பு. அந்த ஊரில் சாதி மாறி திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவு தருபவர் அன்புவின் தந்தை (சத்யராஜ்). தன்மகனும் வேறு சாதியில் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மணக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். மரியா பிரெஞ்சு பெண் என்று எண்ணி காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அவர் பிரிட்டிஷ் பெண் என்று தெரிந்ததும் எதிர்க்கிறார். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளைக்காரனின் பெண்ணை மணக்க கூடாது என்று தடை விதிக்கிறார். இதற்கி டையில் ஊர் மக்கள் திரண்டு அன்புவை ஊரைவிட்டு வெளியேறச் சொல்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன என்பதை கலாட்டா காமெடியாக விளக்குகிறது படம்.

சிவகார்த்திகேயன் டிரேட் மார்க் காமெடி பட வரிசையில் இடம் பிடிக்கும் படமாக உருவாகியிருக் கிறது பிரின்ஸ். காமெடி என்றால் லாஜிக் எதுவும் கிடையாது யாராவது கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்வதுதான் காமெடி.

பெரியவர் ஒருவரிடம் பேட்டி எடுக்கும் டிவி நிருபர், ” இப்படியொரு சம்பவம் உங்கள் ஊரில் நடந்திருக்கிறாதா?” என்று கேட்டால் அவரோ “இதுபோல் நிறைய சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இதான் பர்ஸ்ட் டைம்” என்பார். இப்படி பல பலே பிளேடு காமெடிகளைத்தான் படம் முழுக்க அறுத்துக் கொட்டுகிறார்கள்.

சத்யராஜ் அடிக்கடி கத்தியால் அறுத்து ரத்தம் வரவழைப்பது போல் இயக்குனர் அனுதீப் காமெடி செய்து சிரிப்பு ரத்தம் சொட்ட வைக்கிறார்.

பாட்டில் கார்டு என்ற காய்க்கு அர்த்தம் தெரியாமல் சிவகார்த்தி கேயன் சமாளிப்பதும், அதேபோல் சத்யராஜும் கும்முறு டப்புறு பாடல் வரிக்கு அர்த்தம் தெரியாமல் திணறுவதும் குலுகுலுங்க சிரிக்க வைக்கிறது.

வழக்கம்போல் நடன காட்சியில் சிவகார்த்தி ஜமாய்க்குறார் அவரது நடனத்துக்கு ஈடுகொடுத் திருக்கிறார் மரியா.

படத்தில் பிரேம்ஜிதான் வில்லன் அப்படியென்றால் வில்லனும் காமெடி செய்யணும்..

தீபாவளி போனஸாக ஆனந்த ராஜும் காமெடி செய்கிறார். கெஸ்ட் ரோலில் வருகிறார் சூரி.

மெட்ராஸ் பட்டணம் எமி ஜாக்ஸன் போல் மரியாவும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார்.

சுரேஷ் புரடக்‌ஷன் படத்தை தயாரித்திருக்கிறது.

எஸ்.தமன் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கிறது.

மனோஜ் ப்ரமஹம்சாவின் கேமிரா காட்சிகளை கலர்ஃபுல்லாக படமாக்கியிருக்கிறது.

காமெடியாக கதையை இயக்கி எல்லோரும் சமம் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனா என்ன ஒண்ணு.. படம் முடிஞ்சதும் தியேட்டர்லயிருந்து ஜனங்களை வெளியே அனுப்பிட்றாங்க.

பிரின்ஸ்- தீபாவளிக்கு முறுக்கு அதிரஷம் செய்தவர்கள் – செய்யாதவர்கள் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.

 

Related posts

Aadhi Comes On Board for Akhanda 2: Thaandavam

Jai Chandran

Ghibran Song Dediicated To T N Police

Jai Chandran

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend