Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜனாதிபதியிடம் தேசிய விருது பெற்றார் சூர்யா

ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக் கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் சென்ற ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டி ருந்த நிலையில் தமிழில் அதிகப்பட்சமாக சூரயா நடித்த “சூரரைப்போற்று” படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தன. இதில் நடிகர் சூர்யாவுக்கு  சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது

அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிறந்த திரைக் கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக் கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வானது.

நேற்று டமாலை டெல்லியில்  விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய விருது தேர்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

சூர்யா, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. முதன்முறையாக தேசிய விருது பெறும் சூர்யா பட்டு சட்டை, பட்டு வேட்டி  அணிந்துவந்தார். அவருடன் மனைவி ஜோதிகாவும் விழாவில் பங்கேற்றார்.

Related posts

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ‘ருத்ர தாண்டவம்’ :இயக்குநர் மோகன் ஜி

Jai Chandran

Lakshmi Pradeep starts dubbing for Andhagan

Jai Chandran

ஏ ஜி எஸ்ஸின் “லவ் டுடே” வெற்றி விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend