Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வந்திய தேவனாக ரஜினி நடிக்க சிவாஜி விருப்பம்: கமல் பேச்சு

லைகா புரடக்‌ஷன்,  மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், நாசர்,  ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா செம்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்

விழாவில் கம்ல்ஹாசன் பேசியதாவது:

எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணி ரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை.

ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

மணி ரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை.

#ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம்.

இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்ட வர்கள்  நானும் ரஜினியும்.

வந்திய தேவன் கதாப்பாத் திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது.

வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும்..ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன் என்றார்.

Related posts

Pallichattambi’ Wraps Up: Release Date Here..

Jai Chandran

சூர்யா நடித்த சூரரைபோற்று பட ஒரிஜினல் பின்னணி இசை நாளை வெளியீடு

Jai Chandran

Stonebench Films Happy to Launch Ayaan in Boomika

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend