Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“யானை” ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்தது

கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புத மான சாதனையைப் படைத் துள்ளது. இத்திரைப்படம், திரை யரங்கில் வெளியான போதே  விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது.  இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  பாசம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வை யாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுது போக்கு திரைப்படத்தை உருவாக் கியுள்ளார் இயக்குனர் ஹரி. இது தவிர, அருண் விஜய் மற்றும் நட்சத்திர நடிகர்களின் அசத்த லான நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனம் மயக்கும் இசையமைப்பு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இந்த படத்தினை வெகுவாக அழகுபடுத்தியுள்ளது.

படத்தின் வெற்றி குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறிய தாவது:

ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபல மான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். சிறந்த படைப்பு களை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம் என்று பெரு மிதம் கொள்கிறோம்.  யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்தி ருக்கும் மிகப்பெரும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த  மகிழ்ச்சி தந்துள்ளது, மேலும் இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை  ஊக்குவித்துள்ளது.

ஜீ5 தளம் ஏற்கனவே  சிறந்த உள்ளடக்கம் கொண்ட ஒரிஜினல் தொடர்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பரவலான வரிசைகளை கொண்டுள்ளது.  தற்போது ‘யானை’ படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி யடைந்துள்ளது. ஜீ5 மலிவு விலையில் சிறந்த உள்ளடக் கத்தை வழங்குவதில் அதன் நிபுணத்துவத்திற்காக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலங்கு, ஆனந்தம், ஃபிங்கர்டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என  பல்வேறு ஜானர்களில் அசல் தொடர்களை உருவாக்கி வழங்கு வதில் தனது சிறந்த திறனை நிரூபித்துள்ளது.

‘யானை’யின் மாபெரும் வெற்றி யைத் தொடர்ந்து, ஜீ5 அதன் ஒரிஜினல் மற்றும் புதிய திரைப்படங்களின் அடுத்த வரிசை களை விரைவில் வெளியிட வுள்ளது.

Related posts

சூர்யா – ஞானவேல் கூட்டணியில் சூர்யா 48..

Jai Chandran

கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் நாட்படு தேறல் தமிழிசை

Jai Chandran

“நவரசா” படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend