Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒருபுறம் சென்னை தினம் மறுபுறம் துர்நாற்றம்: மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் ‘சென்னை தினம்’ கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால் வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.

நகரின் முக்கிய நீர்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீர் கலப்ப தாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டு களாகியும், அதை இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம். அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள் தான் நிரம்பியுள்ளன.

நீர்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீர்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய் களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டி ருக்காமல், குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்றி, பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

Related posts

மகேந்திரன் நடிக்கும் “பல்ஸ்* படவிழாவில் கூல் சுரேஷ் கலகலப்பு..

Jai Chandran

Team #LIGER wrapped up the entire shoot

Jai Chandran

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா ஹீரோ..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend