Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ.926 கோடி பாக்கி: தமிழகம் மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை: மநீம அறிக்கை

ரூ.926 கோடி கட்டண பாக்கி! தமிழகம் மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மின் வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளதால்  உடனடி நடவடிக்கைகெடுக்ஜ வேண்டும்  என மநீம வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சி யளிக்கிறது.  மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது( தமிழகத்தின் மரபுசார் எரிசக்தி ஆதாரத்தின் 16652 மெகாவாட் மின் நிறுவுதிறனில் 4335மெகாவாட் தனியார் மின் உற்பத்தியிலி ருந்தும், 6972மெகாவாட் மத்திய அரசின் மின் நிலையங்களின் பங்காகவும் பெறப்படுகிறது)   வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை, தொழிற் துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித் தாலும்,  அந்தத் தொகையினை உடனடியாகச் செலுத்தி தடையை விலக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த “இருண்ட காலம்” வந்துவிடுமோ என்ற தமிழக மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும்.

Related posts

Dr. Regeena at the UK Parliament, London..

Jai Chandran

தேசிய விருது பெற்ற ‘அசுரன்’ ‘ படக்குழுவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பொன்னாடை..

Jai Chandran

சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோ வெளியிட்ட ராம் சரண்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend