Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரவின் நிழல் படத்துக்கு முதல்வர் பாராட்டு

லீ மேஜிக் லேண்டர்ன்
நுங்கம்பாக்கத்தில் மாலை 6 மணி அளவில் , தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின், இயக்குனர் _ நடிகர்  இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் ,
முதல்வர் மு .க .ஸ்டாலின்
பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, ‘இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !”  என்று பாராட்டி , பார்த்திபனையும்
படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.
முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய அரசியல் வரலாறு – 2092 ”
எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம் வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக் கிறது.
இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் தமிழகம் முழுவதிலு முள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்…  இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்  இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்!

Related posts

RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA – PART ONE’

Jai Chandran

3வது ஊரடங்கு: அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி கிடையாது..

Jai Chandran

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் கௌரி நடிக்கும் “உலகம்மை”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend