Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

“குப்பன்” படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்

நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்து உச்சம் பெற்ற நடிகர், இப்பொழுது டைரக்டராக குப்பன்” படம் பற்றி.. கூறியதாவது:

குப்பன்’ உலகத்திலேயே நீங்க பார்க்காத கதைன்னு கிடையாது. ஒரு மீனவ பையனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையிலான கதை. அதனால் ஏற்படுகிற பிரச்சனைகள், அவர்கள் காதல் நிறைவேறியதா என்பதுதான் கதைக்கரு

மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். இவங்களை பற்றி நிறைய சொல்லலாம். நான் அதில் ஒரு சின்ன கதையை மட்டும் எடுத்து, அழகான காதல் கதையா பிரிச்சு சொல்லியிருக்கேன்.

என் பையன் தேவ் சரண்ராஜ் தான் ஹீரோ. பைலட்டுக்கு படிச்சு தேர்வாகி இருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்சனை யாகி விட்டது. அப்புறம் நான் நடிக்கி றேன்னு வந்தவனை இன்ஸ்டியூட் அனுப்பி தயார் பண்ணி இப்ப ஹீரோவாக்கிட்டேன்.

சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு ஹீரோயின்ஸ் அறிமுகமாகிறார்கள். ஆதின்னு இன்னொரு ஹீரோவையும், கார்த்திங்கிற வில்லனையும் அறிமுகப் படுத்துறேன். இவங்க எல்லோருக்கும் சிறந்த எதிர்காலம் நிச்சயம் இருக்கு. இப்படம் மூலம் ஒரு நல்ல கடற்கரை காதலுக்கு உங்களை அழைச்சிட்டு போவேன்.

சோனி ஸ்ரீ  புரடக்‌ஷன் த்யாரிக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு ஜனார்தன்,.
இணை இயக்கம், பாடல்கள் கே.சுரேஷ் குமார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப் பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.

Related posts

KodiyilOruvan Vijayantony’s NaanVaruven Second Single

Jai Chandran

Kalki 2898 AD’ Ready to unveil animation prelude

Jai Chandran

Prabhas Starring “The Raja Saab” Trailer Unveiled

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend