Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திகிலும் புதிரும் நிறைந்த புதியதொடர் மந்திர புன்னகை

தமிழில் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என்ற பெயரைப் பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் புத்தம் புதிய புனைவு நெடுந்தொடர் மந்திர புன்னகை நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவை அறிமுகம் செய்திருக்கிறது. திகிலும், புதிரும் கலந்த மந்திரப் புன்னகை நெடுந்தொடர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பை தொடங்கவிருக்கிறது. உண்மை என்பது, கற்பனையையும், புனைவையும் விட விசித்திரமானது என்ற கருத்தியலை வலியுறுத்துகின்ற இந்த புரோமோ, காயத்ரி (நடிகை மெர்ஷீனா நீனு நடிப்பில்), கதிர் (நடிகர் உசைன் அஹமத் கான் நடிப்பில்) மற்றும் குரு விக்ரம் (நடிகர் நியாஸ் கான் நடிப்பில்) என்ற இதன் முக்கிய கதாபாத்திரங்கள் மீது ஒரு கண்ணோட்டத்தை சுவைபட வழங்குகிறது. இவர்களது வாழ்க்கையில் மர்மமும், புதிரும் சூழ்ந்திருக்க ஒருவர் மற்றொருவரோடு இவர்களது வாழ்க்கை பின்னிப் பிணைந்திருப்பதை இந்த புரோமோ கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு காவல் நிலையத்தில் “காணாமல் போன நபர்களுக்கான அறிவிப்பு பலகை காட்சியோடு தொடங்கும் இந்த புரோமோ, கண்கட்டி ஒளிந்து விளையாடுகின்ற விளையாட்டின் மீதான வாழ்க்கைத் தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. ஒரு பெண் (நடிகை நாயனா ராஜ்) கடத்தப்படுவதை இந்த புரோமோ காட்டுகிறது அதைத் தொடர்ந்து ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி நிகழ்வுகளோடு இதயத்துடிப்பை ரேஸ் குதிரைப்போல எகிற வைக்கின்ற ஒரு த்ரில்லராக இக்கதை பயணிக்கிறது. ஒரு சமையல்காரராக நடிகர் நளினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இதில் இடம்பெறுகிறார். யதார்த்தத்தின் ஒரு முகமாக எது இருக்கக்கூடும் மற்றும் அந்த இளம் பெண்ணை யார் கடத்தியிருக்கக்கூடும் என்று பார்வையாளர்களை மூளையை கசக்கி சிந்திக்கத்தூண்டும் மந்திரப்புன்னகை இனிவரும் நாட்களில் பார்வையாளர்கள் எதிர்பார்ப்போடும், ஆர்வத்தோடும் தவறாமல் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக மந்திர புன்னகை இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அறிய முடியாத மர்மமான நபர்கள் மத்தியில் பொய்கள் மற்றும் ஏமாற்றுகளால் பின்னப்பட்டிருக்கும் சூழ்ச்சி வலையில் சிக்கியிருக்க, ஒவ்வொரு நபரும் அவரவருக்கான தனிப்பட்ட, மறைக்கப்பட்ட நோக்கம் மற்றும் செயல்திட்டத்தோடு இயங்கும் இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி பார்வையாளர்களை அவர்களது இருக்கைகளின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பது நிச்சயம். அடுத்து என்ன நிகழப்போகும் என்ற எதிர்பார்ப்பால் பதைபதைப்புடன் ஒவ்வொரு நிமிடமும் நகர்கின்ற இந்த திகில் தொடரின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து ஆரம்பமாகிறது.

மந்திர புன்னகையின் புரோமோ கீழ்க்கண்டவை உட்பட பல்வேறு தளங்களில் கிடைக்கிறது;

யூ டியூப்: https://www.youtube.com/watch?v=Ryz5ofGfxXU
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/p/CfmBnDkoF8B/?igshid=MDJmNzVkMjY=

 

Related posts

அருண் விஜய் வா டீல் தீபாவளி முதல்..

Jai Chandran

think music india 10million now

Jai Chandran

லவ்வர் (பட.விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend