Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் -(பட விமர்சனம்)

படம்: ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் –

நடிப்பு: சாம் நெய்ல், ஜெஃப்கோல்ட்ப்ளம், டிவான்டோ வைஸ், க்ரிஸ் பிரெட்,  டிவான்டோ வைஸ், இ.டி.வோங்,   ஒமர் ,

தயாரிப்பு: ப்ராங்க் மார்ஷல், பேட்ரிக் க்ரவ்லி

இசை: மைகேல் கிளாச்சினோ

ஒளிப்பதிவு: ஜான் ஸ்காசவர்ட்ஸ்மேன்

இயக்கம்: கொலின் ட்ரிவோர்ரோ

 

1993ம் ஆண்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெஞ் இயக்கத்தில் வெளியான ஜூராசிக் பார்க் படத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் வந்தன. கடைசியாக 2018ம் ஆண்டு ஜூராசிக் பார்க் ஃபாலன்கிங்டம் படம் வெளியானது. அப்படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கிறது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன். இது இப்படங்களின் ஆறாவது மற்றும் கடைசி அத்தியாயம் ஆகும்.

இப்படத்தில் ஜூராக் பட வரிசையில் முக்கிய பாத்திரங்களில் ஏற்கனவே நடித்த சாம் நெய்ல், ஜெஃப்கோல்ட்ப்ளம், ப்ரைஸி டல்லஸ் ஹோவேர்ட், லாரா டெர்ன், மைகேல் கிளாச்சினோவான்டா வைஸ் பிரபலங்கள் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்கு மட்டுமல்ல டைனசர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அனுசரித்து வாழ படைக்கப்பட்டது என்பதே இப்படத்தின் கரு.

காட்டுக்குள் வாழும் டைனசர்கள் மனித இருப்பிடங்களுக்கு அருகிலும் வசிக்கின் றன. டைனசர்களை சிலர் கூண்டுகளில் அடைத்து வைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பயிர்களை அழிக்கும் லோகஸ்ட்ஸ் (locusts) என்ற ராட்சத வெட்டுக்கிளிகளை ஒரு ஆராய்ச்சியாளர் உற்பத்தி செய்து அதை உலகம் முழுவதும் பரப்பி விவசாயத்தை அழித்து அதன்மூலம் கோடிகள் சம்பாதிக்க திட்டமிடுகிறார். இதை அப்படியே விட்டால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதை உணர்ந்து லோகஸ்ட்ஸ் பூச்சி இனத்தை மரபணு மாற்றி அழிக்க பெண் ஆராய்ச்சி யாளர் எண்ணுகிறார். இதற்கிடையில் சிறுமி ஒருவர் மரபணுக்காக கடத்தப்படு கிறார். கடத்தப்பட்ட சிறுமியை மீட்க அவளது பெற்றோர் செல்கின்றனர். ஒருபுள்ளியில் இவர்கள் அனைவரும் இணைந்து கொடிய பூச்சியை எப்படி அழிக்கின்றனர். கடத்தப்பட்ட சிறுமியை எப்படி மீட்கின்றனர் என்பதுடன் டைனசர்களின் கதி என்னவாகிறது என்பதற்கும் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ஜூராசிக் பார்க் என்றாலே டைனசர் களின் அட்டகாசம்தான் நினைவுக்கு வரும் அவைகளின் அட்டகாசம் இப்படத் திலும் தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் தனி தீவில் இருந்த டைனசர்கள் இப்படத்தில் மனிதர்கள் வாழும் பகுதிக்கு அருகிலேயே வசிக்கிறது.

சிறுமியின் தந்தை க்ரிஸ் பிரெட்,  தான் வசிக்கும் பகுதிக்குள் வரும் டைனசரை நெருக்கமாக நின்று அதனை சைகை மூலம் கட்டுப்படுத்தி விரட்டுவது பரபரப்பு.

மகள் கடத்தப்பட்டதுபோல் டைனசரின் குட்டியும் கடத்தப்பட அதையும் தேடி கண்டுபிடித்து அதன் தாயிடம் ஒப்படைப்பேன் என்ற டைனசர் அம்மா சென்ட்டிமென்ட்டும் ஒருபக்கம் கதையின் அங்கமாகிவிடுகிறது.

உலகிலேயே மிகப் பெரிய டைனசர்கள், மிகச் சிறிய டைனசர்கள் என பலவகை டைனசர்கள் படத்தில் உலா வருகின்றன.

ராட்சத டைனசர்கள் மோதிக் கொள்வதும், கொடூர டைனசர்கள் ஹீரோவையும் கூட்டாளிகளையும் துரத்துவதும் திகில் படரச் செய்கிறது.

ஜூராசிக் வேர்ல்ட் குடும்பத்தின் சீனியர் நடிகர்கள் சாம் நெய்ல், ஜெஃப் கோல்ட்ப்ளம் திரையில் தோன்றும்போது கைதட்டல் பறக்கிறது.

நீக்ரோ பெண்ணாக வரும் டிவான்டோ வைஸ் விமானம் ஓட்டி அசால்ட் செய்ன கிறார்.

இப்படத்தை கொலின் ட்ரிவோர்ரோ சில இடங்களில் பிரமிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார்.

3டியில் இப்படம் உர்வாகியிருப்பது ஸ்பெஷல்.

ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் – அசாதாரணம்

Related posts

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

Jai Chandran

Chiyaan 60 FirstLook On 20th August

Jai Chandran

திரையுலக முன்னோடிகள் 3 பேருக்கு சீனு ராமசாமி மரியாதை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend