Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியீடு

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது !

பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும் 100 நாட்கள் உள்ளன: திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறான் பிரம்மாஸ்திரா பாகம் 1 : சிவா!

இந்தி சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன், விசாகப்பட்டினத் தில் பிரம்மாண்டமான பிரமாஸ்திரா பாகம் 1 : சிவா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் தேதியை அறிவித்து இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு பணிகளை தொடங்கிய நிலையில் படக்குழுவில்,  ரன்பீர் கபூர், இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் புகழ்மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ மௌலி ஆகியோர் ஏராளமான ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு அழகிய நகரமான விசாகப்பட்டினத்திற்கு வந்து இறங்கினர். ​அவர்களை வாழ்த்து வதற்காக பெரும் ரசிகர் கூட்டம் கூடியிருந்தது. திரை நட்சத்திரங்களை வெறித்தனமான ஆரவாரத்துடனும் அன்புடனும் அந்த ரசிகர் கூட்டத்தினர் வரவேற்றனர். பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் பிம்மாஸ்திரா திரைப் படத்தின் சிறு காட்சித்துணுக்கை ( Sneak Peek ) வெளியிட்டு, அனைவரையும் மகிழ்வித்தனர். மேலும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிமாச்சலம் கோவிலில் இறைவனை தரிசித்து, படக்குழுவினர் ஆசி பெற்றனர் .

படத்தின் டிரெயலர் லிங்க் :

#100DaysToBrahmastra

ஸ்டார்  ,,ல்ஸ்டுடியோஸ், தர்மா புரடக்‌ஷன்ஸ், ப்ரைம் ஃபோக்கஸ் மற்றும் ஸ்டார் லைட் பிக்சர்ஸ்  ஆகிய நிறுவனங் களால் தயாரிக்கப்படும் இந்த மிகச் சிறந்த படைப்பு 09.09.2022 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர்,ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி போன்ற இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரக் கூட்டணி யில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தினை வழங்குகிறார்.

Related posts

Yaanai – First single YelammaaYela hits 3M+ Views.

Jai Chandran

TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன்்வெளியிடுகிறார்

Jai Chandran

Team HeySinamika Whishes Dulquer Salmaan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend