Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பேரறிவாளன் விடுதலை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 30 வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்தார் பேரறிவாளன். தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தார். அவரது தாயார் அற்புதம் மாளும் தன் மகனை விடுதலை செய்ய கோரி சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன் தமிழக , மத்திய அரசு ,  ஜனாதிபதி, கவர்னர் என பல தரப்பின ரிடம் கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் விடுதலை கிடைக்கவில்லை. இந்தவிவகாரத்தில் தமிழக சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்ய பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்ன ருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. . ஆனால் அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எதுவும் எடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். இது சட்டப்பிரச் னையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சுப்ரீம் கோட்டுக்கு சென்றது. அதில் பல தரப்பு வாத பிரதிவாதங்கள் நடந்தன.

இந்நிலையில் முன்னாள்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறி வாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு  இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வ ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர்.  அதன்படி
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து உத்தரவிட்டனர்.

சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்டு. 161 ஆவது பிரிவில் முடிவெடுக்க கவர்னர் தாமதப்படுத்தி னால் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்க வழிவகுக்கிறது பிரிவு 142. அந்த சட்டப்பிரிவை பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில்   சுப்ரீம் கோர்ட் பயன்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஜாமினில்  வெளியே உள்ள பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பேரறிவாளன் விடுதலை குறித்து சத்யராஜ் வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ

Related posts

சல்மானுடன் மோதல் அனுபவம்- இம்ரான் ஹாஷ்மி

Jai Chandran

Spider-Man No Way Crashing Theatre Websites

Jai Chandran

Pushpa Fourth Single

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend