Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“முத்துநகர் படுகொலை” ஒ டி டியில் 20ல் ரிலீஸ்

முத்துநகர் படுகொலைß’ திரைப்படம் வரும் மே 20 ஆம் தேதி www.tamilsott.com என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக் கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந் தனர். எம்.எஸ்..ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே,கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.

தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர்.மெரினா புரட்சியை இயக்கிய எம்.எஸ்..ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தை பற்றி இயக்குனர் எம்.எஸ்..ராஜ் கூறியது:

“PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத் திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக் கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கி யுள்ளது.

.துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப் படத்தை திரையிட்டோம்.வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட் டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக் களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு,இந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்.” என கேட்டுக்கொண்டார்.

மேலும் ‘முத்துநகர் படுகொலை’ திரைப்படம் வரும் மே 20 ஆம் தேதி www.tamilsott.com என்ற இணைய தளத்தில் வெளியாக உள்ளது.

Related posts

மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி சசி – விஜய் ஆண்டனி

Jai Chandran

Nethu – The 3rd Single from JagameThandhiram releases on 22nd May

Jai Chandran

Actor Akilan SPR brilliant performance in Veeramae Vaagai Soodum

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend