Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டான் படத்துடன் ரங்கா போட்டியா?.சிபி சத்யராஜ் பதில்

சிபி சத்யராஜ் நடிக்கும் படம் ரங்கா. கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சாரா, மனோபாலா, சுவாமிநாதன், ரேணுகா, ஜீவா ரவி, தமிழ்செல்வி, மோனிஷா ரெஹஜா, செந்தில் ராஜலட்சுமிஉள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி வினோத் டி.எல் இயக்குகிறார். அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். ராம் ஜீவன் இசை அமைக் கிறார். ருபன் இசை அமைக்கிறார். அருண் சங்கர் துரை அரங்கம் அமைக்கிறார். திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் ஸ்டன்ட் அமைக்கின்றனர். தாமரை, விவேக், கார்த்திக் நேத்தா, விஜய் கே செல்லய்யா தயாரித்திருக்கிறார்.

முன்னா பாடல்கள் எழுதுகின்றனர். தஷ்தா, விஜி நடனம் அமைக்கின்றனர். சத்யா என்.ஜே, பி.சத்யா என்.ஜெ., பாரதி பி.எஸ். உடை அலங்காரம் செய்கின்றனர். டி.உதயகுமார் சவுண்ட் டிசைன் செய்கிறார். டியூனி ஜான் போஸ்டர் டிசைன் செய்கிறார். பி ஆர். ஒ சுரேஷ் சந்திரா, ரேகா.

ரங்கா படம் மே 13 ம் தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
இதில் சிபி சத்யராஜ் பேசியதாவது:
ரங்கா ஸ்கிரிப்ட்டை இயக்குனர் வினோத் டி.எல் சொன்னவுடன் எனக்கு பிடித்தது. ஏலியன் ஹேண்ட் சின்ட்ரம் என்ற ஒரு புதுவிஷ்ல்யம் அதில் இருந்தது. அது வித்தியாசமாகவும், நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது. ஷீட்டிங் காஷ்மீரில் என்றார் இயக்குனர். அதைக்கேட்டவுடன் இப்படி சொல்கிறாரே, புது இயக்குனரால் இந்த படத்தை இயக்க முடியுமா என்ற மனதுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனாலும் நம்பிக்கை வைத்து நடிக்க சம்மதித்தேன். இயக்குனர் கடுமையாக உழைத்து ஷுட்டிங் நடத்தினார். இதில் பணியாற்றிய எல்லோருமே கடுமையாக உழைத்தனர்.
இப்படத்தில் சண்டை காட்சிகள் விததியாசமாக வடிவமைக்கப்பட்டது. ஸ்டன்ட் மாஸ்டர்கள் திலீப் சுப்பராயன் தினேஷ் சுப்பராயன் அமைத்தனர். அதாவது கதைப்படி நான் யாரிடமும் சண்டைபோடக் கூடாது என்று ஒதுங்கி செல்வேன் ஆனால் என் கையை தானாக என்னையும் மீறி சண்டைபோடும். இசை பாடல்கள், நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர் விஜய் கே செல்லய்யா அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

டான் படம் வெளியாகும்போது ரங்கா படமும் வெளியாகிறதே என்றார்கள். சினிமா டான் சக்தி பிலிம்பேக்டரி சக்திவேல் இப்படத்தை தமிழகம் .முழுவதும் வெளியிடுகிறார். அன்று வெளியாகும் டான் படத்துக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு சிபி சத்யராஜ் பேசினார்.

இயக்குனர் வினோத் டி.எல். கூறியதாவது:

ரங்கா படம் ஆக்‌ஷன், த்ரில்லர் படம், ஹீரோ இக்கதைக்கு முக்கியம். இவர் 10 பேரை அடித்தால் நம்ப வேண்டும். அதற்கு சிபி ஹீரோவாக நடித்தால் சரியாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன் அவர் கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார். அதன்பிறகு இந்த படம் வேகம் எடுக்கத் தொடங்கியது.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தியது மறக்க முடியாது. கடும் பனிப்பொழிவில் படக் குழுவினர் கடுமையாக பாதித்தனர். தோல் எல்லாம் கருத்து, தோல் உரிந்து சிரமப்பட்டனர். எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு பணியாற்றினார்கள்.
ஒரு கட்டத்தில் திடீரென்று வெயில் அடித்து அந்த வெப்பத்தில் பனி எல்லாம் உருகி கொடைக்கானல்போல் ஆகிவிட்டது. ஆனால் அந்நியமான இடத்தில் ஹீரோ, ஹீரோயின் சிக்கிக்கொள்வது தான் கதை. ஆனால் அங்கிருந்த சூழல் அப்படி இல்லாமல் போய்விட்டதால் என்  கண்ணில் நீர் வந்துவிட்டது. ஆண்டவனை வேண்டினேன். சிறிதுநேரத்தில் எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் ஜன்னலை திறந்து பாருங்கள் என்றார். அப்படி பார்த்தபோது அங்கிருந்த காட்சியே மாறியிருந்தது. பனி பொழிந்து நான் எப்படி வேண்டும் என்று நினைத்தே னோ அப்படி பனி கொட்டி இருந்தது. அதன் பிறகு படபிடிப்பு திட்டமிட்டபடியே நடந்தது.
இவ்iவாறு இயக்குனர் கூறினார்.

Related posts

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் படம்

Jai Chandran

பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம்: கமல்ஹாசன் வாழ்த்து

Jai Chandran

சூர்யா மீது எனக்கு கிரஷ் – நடிகை ஹர்ஷா பேட்டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend