Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பால முருகன் – அம்மு அபிராமி – “ புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கு கிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குனராக பணியாற்றியவர்.

தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  மு.பெ.சுவாமி lநாதன்  ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, டி.எஸ்.ஆர், , அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்.
இயக்கம்  உலகநாதன் சந்திரசேகரன்.
ஒளிப்பதிவு  மணி பெருமாள். இசை பிஜார்ன் சுர்ராவ். படத்தொகுப்பு மப்பு பிரகாஷ். கலை .கோபி MFA
சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி.
நடனம் அப்சர். நிர்வாக தயாரிப்பு  அம்பிகாபதி.எம்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங் களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

கொன்றால் பாவம் (பட விமர்சனம்)

Jai Chandran

DEADPOOL & WOLVERINE FINAL TRAILER

Jai Chandran

பிகினிங் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend