படம்: கே ஜி எஃப் 2
நடிப்பு: யஷ், சஞ்சய் தத், ரவீனா டான்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், அர்ச்சனா ஜோயிஸ், மாளவிகா அவினாஸ், ராவ் ரமேஷ
தயாரிப்பு: ஹோம்பாலா பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர்
வசனம்:அசோக்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : யுவன் கவுடா
இயக்கம்: பிரஷாந்த் நீல்
ரிலீஸ்: ட்ரீம் வாரியர்ஸ்
பி.ஆர்.ஒ: யுவராஜ்
கே ஜி எஃப் படத்தின் தொடர்ச்சியக அதன் இரண்டாம் பாகாமாக உருவாகி இருக்கிறது கே ஜி எஃப்2.
தங்க சுரங்கம் கே ஜி எஃப்பில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த கருடாவை கொன்ற ராக்கி கே ஜி எஃப் தங்க வயலை தன் கட்டுப்பட்டுக்கு கொண்டு வருகிறான் அங்குள்ள மக்களை கருடாவின் பிடியிலிருந்து விடுவித்ததால் ராக்கி அங்குள்ளவர்கள் தங்களின் காவல் தெய்வமாக ராக்கியை கருதுகின் றனர். இந்நிலையில் ராக்கியை அழிக்க கருடாபவின் சகோதரரர்களும் வாரிசு களும் சதி திட்டம் தீட்டுகின்றனர். கொடூர குணம் படைத்த அதிராவை ஏவிவிடுகின்றனர். ராக்கியை அதிரா துப்பாக்கியால் சுடுகிறான். அதில் உயிர்பிழைக்கும் ராக்கி வெளிநாடு சென்று பெரும் படை பலத்துடன் திரும்பி வந்து அதிராவை ஓடவிடுகிறான். ஒரு கட்டத்தில் அதிரா மத்திய அரசுடன் மோத வேண்டியதாகிறது. ஆனால்பிரதம மந்திரியையேநேரில் சந்தித்து மிரள வைக்கிறான். ஆனால் கெட்டநேரம் ஒன்றாகா சேர்ந்து வர ஒரு பக்கம் அதிரா திரும்ப வந்து தாக்குகிஅறான் இன்னொரு பக்கம் மத்திய அரசு ராணுவத்தை ஏவி அழிக்க முயல்கிறது. இறுதியில் நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் இடிமுழக்கதுடன் கூடிய பதிலை தருகிறது.

கே ஜி எஃப் 2 படத்திற்கு எவ்வளவு பில்டப் தரப்பட்டதோ அதற்கெல்லாம் ஒருபடி மேலாகவே படமும், காட்சிகளும், நடிப்பும், இசையும் என்று போட்டிபோட்டு கொண்டு ஒன்றையொன்று முந்துகிறது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி நிற்கிறார் ராக்கி பாயாக நடித்திருக்கும் யஷ்.
படம் தொடங்கியது முதல் 10 நிமிடத்துக் கொருமுறை கிளைமாக்ஸ் பார்ப்பது போன்ற மாஸான காட்சிகள் உடலை இறுக்கமாக இழுத்துபிடிக்கவைக்கிறது.
யஷ் நடந்து வரும் தோரணையும், எதிரிகளை ஒன்மேன் ஆர்மியாக நின்று தாக்கி தெறிக்கவிடுவதும் அசத்தல். இப்படி அவர் மோதும் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளுக்கும் பல அசத்தல்கள் போடவேண்டும்.
சி பி ஐ ரெய்டு நடத்தி ஒரேயொரு தங்க பிஸ்கெட்டை தூக்கி சென்றதற்காக அந்த அலுவலக பில்டிங்கையே யஷ் பெரிய சைஸ் மிஷின் கன் மூலம் தகர்ப்பது அரங்கை அதிரவிடுகிறது. அதேபோல் யஷை அழிக்க உத்தரவிடும் பிரதமர் ரவீனா டான்டனை அவரது அலுவலகத் திற்கே வந்து சந்தித்து சவால் விடுவது அதிரிபுதிரி.

யஷை கப்பல் படை அழிக்கும் இறுதிக்காட்சி அரங்கை பின்டிராப் சைலன்ஸ் ஆக்குகிறது. அத்துடன் கே ஜி எஃப் சேப்ட்ர் முடிந்துவிட்டதா என்று ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும் நேரத்தில் கே ஜி எஃப் சேப்டர் 3க்கான லீட் தரப்பட்டதும் மற்றொரு பிரமாண்டத்துக் கான அழைபிதழை தந்து அரங்கை சலசலப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
ஒவ்வொரு காட்சியையும் எப்படியோசித் தார்கள் அதை எப்படி படமாக்கினார்கள் .என்ற ஆச்சர்யம் மனதில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
அதிராவாக வரும் சஞ்சய் தத் தோற்றத்திலேயே வில்லனாக பயமுயறுத்துகிறார். ஈஸ்வரிராவ், ஸ்ரீநிதிஷெட்டி, ,பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஸ் குறிப்பாக யஷ்ஷின் தாயாக வருபவரும் சிறப்பான. நடிப்பால் கவர்கின்றனர்.
ஹோம்பாலா பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் அதிக பொருட்செலவில் படத்தை த்யாரித்திருக்கிறார்.
பிரஷாந்த் நீல் பிரமாண்ட இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். கிராமத்து தாய் ஒருத்தி ” எந்த பெண்ணுக்குத்தான் தங்கம் பிடிக்காது என்று சொல்ல, “உலகத்தில் உள்ள எல்லா தங்கமும் உனக்கு தருவேன் அம்மா ” என்று சிறுவயதில் சொல்லும் ஒரு சொல்லை நிறைவேற்ற போராடும் ஒரு மகனின் கதைதான் இப்படத்தின் கரு இதை எந்தளவுக்கு பிரமாண்டமாக சொல்ல முடியும் என்பதை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் தொடக்கம் முதல் இறுதிரை டெம்போ குறையாமல் இருக்கச் செய்வது ரவி பஸ்ருர் இசை என்றால் மறுக்க முடியாது.
அதேபோல் காட்சிகளை கேமரா உளியால் செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவன் கவுடா
அசோக்கின் வசனம் உஷ்ணம் ஏற்றுகிறது எடிட்டர் உஜ்வல்குல்கர்ணி, ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு, ஆடை மற்றும் அரங்க அமைப்பாளர் என அத்த்னை பேரின் உழைப்பும், வியர்வையும் பாராட்டுக்குரியது
கே ஜி எஃப்2 – பட்டய கிளப்பியிருக்கிறது.

