Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வலிமை (பட விமர்சனம்)

படம்: வலிமை

நடிப்பு: அஜீத்குமார், கார்த்திகேயா கும்மகொண்டா, ஹூமா குரோஷி, பானி ஜே, சுமித்ரா, ராஜ் ஐயப்பா, துருவன், தினேஷ் பிரபாகரன், ஜி.எம்.குமார், செல்வா, பாவல் நவகீதன் கார்த்திக் ராஜ், புகழ்

தயாரிப்பு: போனிகபூர், ஜீ ஸ்டுடியோஸ்

இசை: யுவன் சங்கர் ராஜா,

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

இயக்கம்: எச்.வினோத்

பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா

கொலம்பியாவிருந்து தமிழகத்துக்கு போதை மருந்தை ஒரு கூட்டம் கடத்தி விற்கிறது, சென்னையில் அதையொட்டி செயின் பறிப்பு, கொலை போன்ற பயங்கரம் அரங்கேற்கிறது. 10 வருடமாக அட்டகாசம் செய்யும் இந்த போதை மருந்து கடத்தல் கூட்டத்தை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறு கிறது. அதற்கு சரியான அதிகாரி ஒருவரை சென்னை போலீஸ் கமிஷனர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். மதுரையில் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் உதவி கமிஷனர் அர்ஜூன் (அஜீத்குமார்) சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். அவரிடம் போதை மருந்து கடத்தல் கூட்டத்தை பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. துல்லியமாக திட்டமிட்டு கடத்தல் கூட்டத்தை சீக்கிரமே நெருங்குகிறார். இதனால் போதை மருந்து கடத்தல் கூட்ட தலைவன் அதிர்ச்சி அடைகிறான். அவனை போலீஸ் அதிகாரி அர்ஜூன் போராடி கைது செய்வதுடன் ரூ 3 கோடி மதிப்பிலான போதை மருந்தையும் கைப்பற்றுகிறார். அவனிடம் விசாரிக்கும்போது தனக்கு தலைவன் வேறு ஒருவர் இருப்பதாக கூறி ஒருவனை சிக்க வைக்கிறான். அவன் தனது தம்பி என்று தெரிந்து போலீஸ் அதிகாரி அர்ஜூனின் அதிர்ச்சி அடைகிறார். அவனையும் அர்ஜூன் கைது செய்கிறார். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த அர்ஜூன் அழைத்துச் செல்லும்போது போதை மருந்து தலைவனை விடுவிக்க அந்த கூட்டம் கடுமையாக முயற்சிக்கிறது. தப்பி செல்லும் அவன் கைப்பற்றப்பட்ட போதை மருந்தை திருப்பி தராவிட்டால் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்று அர்ஜூனை மிரட்டுகிறான். அவனது மிரட்டலை துணிச்சலாக எதிர்த்து குடும்பத்தை அர்ஜூன் எப்படி மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

ஏற்கனவே அஜீத் நடித்த விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆக்‌ஷன் அதிரடி படமாக வலிமை உருவாகி இருக்கிறது. உலக அளவில் நடந்த பைக் ரேஸில் கலந்துகொண்டு சாகசம் செய்திருக்கும் அஜீத்குமாருக்கு இப்படத்தில் பைக் ரேஸ் செய்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற அம்சம் அல்வா சாப்பிடுவதுபோல் பிடித்துப்போக உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பைக் ஓட்டியும், வீலீங் போன்ற சாகசங்கள் செய்தும் அசத்தி சண்டை காட்சிகளில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைத்திருக்கிறார்.

10 ஆண்டுகளாக சென்னை மக்களை நிம்மதி இல்லாமல் அட்டகாசம் செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அதிகாரி எங்கு இருக்கிறாரோ என்று கமிஷனர் செல்வாவின் மைன்ட் வாய்ஸ் கேட்கும்போது மதுரையில் அஜீத் கம்பீரமாக என்ட்ரி தந்ததும் அரங்கில் ஆரவாரம் காதை துளைக்கிறது.

”நாங்க வேற மாறி” பாடலுக்கு அஜீத் போடும் ஒரு குத்தாட்டம் 2 ஆண்டுக் கும் மேலாக காத்திருக்கும் ரசிகர் களுக்கு உற்சாகத்தை அதிகரித்து ஆட்டம்போட வைக்கிறது.
சென்னைக்கு மாற்றலாகி வரும் அஜீத் போதை மருந்து கூட்டத்தின் செயல்பாடுகளை சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்து அவர்களை பிடிக்க போடும் ஸ்கெட்சும் காட்சிகளை ஜெட் வேகத்தில் பறக்க வைக்கிறது.
பைக்கில் தப்பிச்செல்லும் போதை மருந்து கூட்ட தலைவன் போக்கு காட்டி அஜீத்திடமிருந்து தப்பிக்கும் நிலையில் அதேபாணியில் அஜீத்தும் போக்கு காட்டி போதை மருத்து கூட்ட தலைவனை கைது செய்வது செம் சீன். அவனிடம் விசாரிக்கும்போது தனக்கு வேறு தலைவன் இருப்பதாக கூறி அஜீத்தின் தம்பியையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்போது என்ன செய்வதென்று தெரியாமல் அஜீத் திணறுவதும் அதைத் தொடர்ந்து அஜீத்துக்கு பதவி இறக்கம் தரப்படும் போதும் அடுத்து அஜீத் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.

சுமித்ராவின் அம்மா சென்டிமென்ட் ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது. முழுக்க ஒன் மேன் ஆர்மியாக அஜீத் தான் முழுபடத்தையும் தோள் மீது சுமந்திருக்கிறார்.

அஜீத்துக்கு காதல் ஜோடியாக ஹூமா குரோஷி வருவார், கொஞ்சமாவது ரொமான்ஸ் செய்வார் என்று பார்த்தால் அவரும் அஜீத்துடன் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு துணை நின்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

போதை மருந்துக்கும், அந்த கூட்டத்துக்கும் இளைஞர்கள் அடிமையாகி விடக்கூடாது என்ற நோக்கில் சட்ட விரோத செயலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் அஜீத்.

பே வியூ புராஜக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இயக்குனர் எச்.வினோத் போதை மருந்து கூட்டத்தின் கடத்தல் டெக்னிக்குகளை அக்குவேறாக சித்தரித்து கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாகவும் அஜீத்தின் முதல் பான் இந்தியா படமாகவும் வலிமையை இயக்கி இருக்கிறார்.

பைக் ரேஸ் சாகசங்களை ஆச்சர்ய மூட்டும் வகையில் படமாக்கி இருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா.

யுவனின் இசையில், ”நாங்க வேற மாதிரி” பாடல் ரசிகர்களை அரங்கிற்குள் ஆட்டம் போட வைத்திருக்கிறது.

திலீப் சுப்பராயானின் ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்புகிறது.

வலிமை – அஜீத்தின் ஒன் மேன் ஆர்மி ஆக்‌ஷன் அட்டகாசம்.

Related posts

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

Jai Chandran

ஸ்டேஜ் நடன கலைஞர்கள் 80 பேர்களுக்கு சிந்து மற்றும் நண்பர்கள் உதவி

Jai Chandran

NBK107 Title To Be Revealed On October 21st

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend