Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மைண்ட் ரீடிங் படம் “கூர்மன்” இசை வெளியீட்டில் நட்சத்திர கூட்டம்

எம்.கே என்டர்டெயின்மென்ட்
(MK Entertainment) தயாரிப்பில் இயக்குநர் பிரையன் பி. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்காலஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”.  மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ( மைண்ட்  ரீடிங் ) பாத்திரத்தை பிரதான பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான திரைக் கதையில் உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது.
கூர்மன் பட இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது

இவ்விழாவின் தொடக்கமாக மனதில் உள்ளதை கண்டு பிடிக்கும்  மெண்டலிஸ்ட் நிகழ்ச்சி நடந்தது.  பார்வையா ளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து   அவர்கள்  மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் நிகழ்வினை  செய்துகாட்டினர். இது   பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக சங்க தலைவர் டைமண்ட் பாபு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் நடிகர் பாலசரவணன் பேசியதாவது:

கூர்மன் தலைப்பே வித்தியாச மானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாசமாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக  வித்தியாசமாக இருந்தது. இந்த டீமும் வித்தியாசமான வர்கள்தான்.  இப்படத்தில் இயக்குநரிடம்  நிறைய கற்றுக்கொண்டேன். இதில் முதல்முறையாக கொஞ்சம் வயதான வேடத்தில் நடித்துள்ளேன்.  எங்களுடன் ஒரு நாயும் நடித்தது அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது:
கூர்மன் படத்தில் எனக்கு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் மதன்.   இவர்  மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால  அதில் பணி யாற்றிய யாருக்கு வேண்டு மானாலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். இப்பட ஹீரோ ராஜாஜியுடன்  எங்கிட்ட மோதேதே படம் செய்துள்ளேன். கூர்மன் படத்தில் நன்றாக நடித்துள்ளார்.
இயக்குநர் கத்தி எடுத்து குத்தப்போறாங்க என்பதையே, சத்தமே இல்லாமல் அமைதி யாக சொல்வார். படத்தை அழகாக எடுத்துள்ளார் இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது:
கூர்மன்   இயக்குனர் பிஜு (பிரைன் பி ஜார்ஜ்) கதை சொன்னபோது எப்ப வரனும்னு சொல்லு வர்றேன் என்று சொன்னேன், அவரை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விஷயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய கஷ்டமாக இருந்தது. போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷுவலாக நடித்தார்கள், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இது நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

எடிட்டர் தேவராஜ் பேசியதாவது:

படத்தில் வாய்ப்பு  தந்த தயாரிப் பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜுவுக்கு நன்றி. பிஜுவும் நானும் 12 வருட நண்பர்கள். மற்ற படத்திற்கும் இப்படத் திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே செய்து வைத்திருந்தார். படம் நன்றாக வந்துள்ளது.

நடிகர் பிரவீன் பேசியதாவது:

டிரிப் படத்திற்கு பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு கூர்மன். மதன் என்னை அழைத்து வாய்ப்பு தந்தார். இதில் இரண்டவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம். வேடத்தை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன், என்னுடன் நடித்த அனைவரும் அருமையாக நடித்தார்கள். ராஜாஜி, பால சரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் மதன். படம் பெரிய வெற்றி பெற வாழ்த் துக்கள்.

சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது:
சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம், அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் பெறும், அந்தப்படத்தில் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது அந்தப்படம் போல் இப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். பிஜுவை உதவி இயக்குநராக பல படங்களில் பார்த்தி ருக்கிறேன். அவர் உழைப்பு தெரியும். அவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் சதீஷ் பேசியதாவது:
என்னுடன் பயணித்த என் குழுவிற்கும், அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனை வரும் கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள், படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வந்து விடுவோம்.

பாடலாசிரியர் உமா தேவி பேசியதாவது:

கூர்மன் என இலக்கிய விகுதியை, தமிழுக்கு தந்திருக்கும் குழுவிற்கு என் நன்றிகள். இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். இசை அமைப்பளர்  பிரிட்டோெனக்கு சந்தோஷ் நாரயணன் மூலம் அறிமுகமானவர். அவரது இசை வித்தியாசமாக இருந்தது. கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ஆம்பல் பூ எனும் பாடல் திவாகர், வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார். நாசூக்காக வேலை வாங்கு வதில் இந்தக்குழு கில்லாடி, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, பாடலை கவிதையாய் வேண்டுமென எழுதி வாங்கினார்கள். பாடலும் படமும் நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடல்களுக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியதாவது:

தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. நான் இசை அமைத்த பாடல் இசை பற்றி இயக்கு நரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது,  அவர் உதவியா ளர்களிடம் கேட்டால் தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது. அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி திருத்தமே சொல்ல முடியாதளவுக்கு  எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை இயக்குனர் பிஜுவே எழுதி விட்டார். இந்தப் பாடலை கேட்டு, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி.

நடிகர் ராஜாஜி பேசியதாவது:

எம் கே ர்ன்டட்டெயின்மென்ட்  தயாரிப்பாளர், தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப் பவர் அல்ல தன்னை சுற்றியி ருக்கும் எல்லோரும் நன்றாக  இருக்க வேண்டும் என்று நினைப்பவர். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார்.   இயக்குனர் என்னை முதலில் சந்தித்த போது ஆடிசன் பண்ணலாம் என்றார். ஒண்ணுமில்ல,  இத பண்ணா போதும்னு நன்றாக வேலை வாங்கினார். தலைகீழாகவும் நிற்க வைத்தார். படம் அருமையாக வந்துள்ளது. இசையமைப் பாளர் டோனி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் . இப்படத்தில் எனது கேரக்டர் ரொம்ப முக்கியம். நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சி. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் இப்படம்  தரமான படமாக இருக்கும். வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மஅனைவரும் ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் பிரையன் பி. ஜார்ஜ் பேசியதாவது:

எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை நன்றாக் செய்தார்கள்.  அதனால்தான் இந்தப்படம் நடந்தது. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது  அதற்காக மதன் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை சிக்கல் இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி.
நாயகன் ராஜாஜியை தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமெனதான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். பாடலாசிரியர் உமா தேவி  அட்டகாசமாக பாடல்  எழுதி தந்துள்ளார். பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார்.  இதுவொரு  நல்ல படம் ஆதரவு தாருங்கள்.

நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது:
பிரையன் பி. ஜார்ஜை  தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம்   இயக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக
போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மை யிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக் கதை வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்தி ருந்தால் உங்களுக்கே இப்படம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும   என்பது தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது. ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் நடப்பதுபோல் காட்சியை மாற்றி எடுத்தோம் அப்படியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், இயற்கையின் ஒத்துழைப்பால்  மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும். படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

இவ்வாறு பட குழுவினர் பேசினார்கள்.

கூர்மன் பட இசைத்தட்டை நரேன் வெளியிட ஜனனி ஐயர் உடன்  இணைந்து படக்குழு வினர் பெற்றுக்கொண்டனர்.

அனைவரையும் பி ஆர் ஓ பரணி அழகிரி, திரு முருகன் வரவேற்றனர்.

இப்பட தொழில்நுட்ப குழு விபரம் வருமாறு:
எழுத்து இயக்கம்  பிரையன் பி. ஜார்ஜ். ஒளிப்பதிவு  சக்தி அர்விந்த். இசை  டோனி பிரிட்டோ. எடிட்டிங்  எஸ். தேவராஜ். கலை கருணாநிதி. ஒலி வடிவமைப்பு  தாமஸ் குரியன். ஸ்டண்ட்  ஸ்டன்னர் ஷாம்.உடை வடிவமைப்பு  டினா ரோஸாரியோ. விஷுவல் எபெஃக்ட்ஸ் ஆர். ஜீவரத்தினம் புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் டி.நரசிம்மன். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் எஸ்.கணேஷ், சதீஷ்பாபு. மேக்கப்  யூ.கே.சசி.
ஸ்டில்ஸ்  ஜீகே. மக்கள் தொடர்பு பரணி அழகிரி, திருமுருகன். இணை தயாரிப்பு  சுரேஷ் மாரிமுத்து. தயாரிப்பு எம் கே .

Related posts

நடிகர் சித்தார்த் பற்றி நடிகை பார்வதி

Jai Chandran

Watch Suspense/investigative drama Vilangu trailer

Jai Chandran

Prime Video Unveils the Teaser of Upcoming Action Thriller ‘Mahaan’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend