படம்: அன்பறிவு
நடிப்பு: ஹிப் ஹாப் தமிழா ஆதி, நெப்போலியன், விதார்த், சாய் குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மீரா, ஷிவானி, ஆடுகளம் நரேன், ரேணுகா, ஆர்.ஜெய், சரத், முல்லை, சாய் சித்தார்த், மாரிமுத்து
தயாரிப்பு: டி.ஜி,தியாகராஜன்,, அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன்
இசை: ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: அஸ்வின் ராம்
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா
மதுரை அருகே உள்ள ஆண்டிபுரத்தின் பெரிய மனிதர் நெப்போலியன். அவரது சொல்லுக்கு ஊர்மக்கள் கட்டுப்பட்டு செயல்படுகின்றனர். மகள் ஆஷா விரும்பியதற்காக அரசபுரத்தை சேர்ந்த சாய்குமாருகு ஆஷாவை கட்டி வைக்கிறார். அன்பு அறிவு என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்கள் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்துகிறார் விதார்த். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கும் சாய்குமாரை உசுப்பிவிட அவர் நெப்போலியனுடன் சண்டை போட்டுவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இதில் கோபம் அடையும் நெப்போலியன் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகிறார். ஊரும் ரெண்டுபடுகிறது. நெப்போலியன் பேரனாக வளரும் அன்பு ஊரில் அடிதடி என்று சுற்றி வருகிறார். தன்னை விட்டு சிறுவயதில் விலகி சென்ற தந்தை சாய்குமார் மீது கோபமாக இருக்கிறார். இதற்கிடையில் சாய் குமார் லண்டன்ல் பெரிய தொழில் அதிபராகி முன்னேறுகிறார். அவருடன் வளரும் அறிவு தனது தாய் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தாய் ஊயிருடன் இருப்பதை அறிந்து இந்தியா வருகிறார் அறிவு. இந்நிலையில் அன்பு கடத்தப்பட்டு லண்டன்கொண்டு செல்லப்படுகிறார். ஊர் வந்த அறிவு தன்னை அன்புபோல் தோற்றம் மாற்றிக்கொண்டு தாயுடன் பழகுகிறார். ஒருசில நாட்களிலேயே சாயம் வெளுத்து விடுகிறது. இந்த விஷயம் நெப்போலியனுக்கும் தெரிய அவர் அறிவை துரத்துகிறார். அதே சமயம் லண்டன் சென்ற அன்பு அங்கு தன் தந்தை சாய் குமாரிடம் கோபத்தை காட்டி அவரை அவமானப்படுத்து கிறார். இதற்கிடையில் இரு குடும்பத்துக்கும் அரசியல் வாதியாக வளர்ந்துவிட்ட விதார்த் பகையை மூட்டி விடுகிறார். இறுதியில் பிரிந்து குடும்பமும் பிரிந்து கிடக்கும் ஊரும் ஒன்று சேர்கிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கும் மற்றொரு குடும்பபாங்கான படம் அன்பறிவு.
அண்ணன் தம்பி இரட்டையர்கள் பிரிந்து சேருவதென்பது அந்த காலம் தொட்டு பல படங்களில் அறிமுகமான கதை. அந்த சாயல் இல்லாமல் இரட்டை வேட படங்கள் எடுப்பது கடினம். அந்த கடினம் இந்த படத்திற்கும், ஏற்பட்டிருக்கிறது. அதனால் சில காட்சிகளை அதே பாணியில் படமாக்கி இருக்கிறார்கள்.
அன்பு, அறிவு என்ற இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கிறார். தோற்றத்திலும், வசன உச்சரிப்பிலும் லேசான வித்தியாசம் காட்டுகிறார். பின்னர் இரு வேட கெட்டுப்பும் ஒன்றுபோல் ஆகிவிடுகிறது. நடிப்பும் ஒரே பாணிக்கு மாறிவிடுகிறது.
லண்டனிலிருந்து அம்மாவை பார்க்க ஊருக்கு வரும் ஆதி தாய் ஆஷாவை கண்டதும் உருகுவதும் அவரை கட்டிப்பிடித்தும், அவர் கையால் சாப்பிடுவதுமாக சென்டிமென்ட் சீன்களில் உருக வைக்கிறார். ஒரு கட்டத்தில் நெப்போலியனுக்கு தன் வீட்டுக்கு வந்திருப்பது அறிவு என்பது தெரிந்ததும் அவரை கன்னத்தில் அறைந்து வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்.
லண்டனுக்கு கடத்தி செல்லப்பட்ட ஆதி அங்கு தந்தை சாய் குமாரை அவமானபடுத்துவதற்காக என்னென்ன அலப்பறைகள் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்கிறார். மரியாதை இல்லாமல் தந்தையை வாடா போடா என்று பேசுவது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது.
காஷ்மீரா, ஷிவானி என இரண்டு ஹீரோயின்கள் இருந் தாலும் இருவருக்கும் பெரிதாக வேலை ஒன்றுமில்லை. ஆதிக்கு அடவைஸ் தரும் அட்வைஸர்களாகவே வந்து செல்கின்றனர்.
சீன் முழுக்க நிறைவாக வருகிறார் நெப்போலியன் அவரது கம்பீரமான தோற்றம் கதாபாத்திரத்தை மெருகேற்றிக்காட் டுகிறது. மதுரை கோபக்காராகவே மாறி இருக்கிறார். கிளைமாஸில் மேடை ஏற வரும் நெபோலியனை அரசியல்வாதி விதார்த் வழிமறித்து சரமாரியாக கேள்வி கேட்டு அவரது மனதை உடைப்பதும் அதில் மனம் நொந்து தளர்ந்த நடையுடன் சென்று கீழே உள்ள ஒரு இருக்கையில் அமர்வதும் உணர்வுப்பூர்வமான நடிப்பு.
வில்லனாக மாறி இருக்கிறார் விதார்த்.
ஹிப் ஆதியின் தாயாக வரும் ஆஷா சரத் தாய் வேடத்துக்கு பொருத்தமான தேர்வு. ரேணுகா, ஆடுகளம் நரேன் நடிப்பும் ஒ கே.
கதை எழுதி இரட்டை வேடத் திலும் நடித்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கும் பொறுப்பும் ஏற்றிருக்கிறார்.
இளம் இயக்குனர் அஸ்வின் ராமுக்கு கொஞ்சம் ஹெவியான கதையை தநது இயக்க வைத்திருக்கிறார்கள். அதை ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார். வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு மதுரைக்கும். லண்டனுக்கும் வித்தியாசமான காட்சிபடுத்தல் கையாண்டிருக்கிறார்.
அன்பறிவு – 22ம் ஆண்டில் வெளியாகி இருக்கும் முதல் குடும்ப கதை.

