Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குருப்  (பட விமர்சனம்)

படம் : குருப்

நடிப்பு: துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாறன், சோபிதா துலிபாலா,  சன்னி வாய்னே, ஷினெ டம் சிக்காகோ, பரத், சுரபி லட்சுமி,

தயாரிப்பு: வேஃபரெர் ஃபிலிம்ஸ், எம்   ஸ்டார்  எண்டர்டெயின்மெண்ட்

இசை: சுஷின் சியாம்

ஒளிப்பதிவு:  நினிஷ் ரவி

இயக்கம்: ஸ்ரீநாத் ராஜேந்திரன்

பி ஆர். ஓ : ஜான்சன்

விமானப் படையில்  சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்கான பயிற்சிக்கு வருகிறார் துல்கர் சல்மான். திடீரென்று   ஊருக்கு செல்லும்  அவர் திரும்பவில்லை. சில தினங்களுக்கு பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது. இதனால் பயிற்சி கூடத்தில் இருப்பவர்களும் அவரது நண்பர்களும்  அதிர்ச்சி அடைகின்றனர். துல்கரை காதலித்த சோபிதாவிடமும் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனல் துல்கர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது பின்னர் தெரிகிறது. வெளிநாட்டில் செய்து வைத்துள்ள 8 ;லட்சம் ருபாய் இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றி பெறுவதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து தான் செத்துவிட்டதுபோல் நாடகமாடுகிறார். இதை போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார். 8 லட்சத்துக்காக துல்கர் இப்படி செய்வாரா அதற்கு மேல் ஏதோ மர்மாம் இருக்கிறது என்று போலீஸ் சந்தேகப்பட்டு விசாரணையை முடுக்கி விட  கதை துல்கரின்  பெரிய திட்டத்தை நோக்கி நகர்கிறது. அவரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

த்ரில்லான கதை , ஒரு காட்சியை மிஸ் செய்தாலும் அடுத்து வருவது புரிவது கடினம். துல்கர் சல்மானை பொறுத்தவரை அவருக்கு முற்றிலுமான மாறுபட்ட கதைதான். அதிரடியாக சண்டை காட்சிகளில் நடிக்காமலேயே ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எபெஃக்ட்டை தருகிறார்.

ஹிப்பி ஸ்டைல் தலை முடி,யுடன் 80 காலகட்டங்களின் கலர் கலர் காஸ்டியூம் என தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கும் துல்கர் அதற்கேற்ப தனது நடிப்பு ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார். நெகடிவ் கேரக்டர் என்று தெரிந்தே இந்த வேடத்தை ஏற்றிருந்தாலும்  தனது  மற்றொரு பரிமணாத்தை வெளிப்படுத்த தவறவில்லை துல்கர்.

முதல் பாதியிலேயே தனது கேரக்டரின் தன்மையை லேசாக சுட்டிக்காட்டும் துல்கர் அதன்பிறகு  பக்கா தில்லால்ங்கடியாகவே மாறிவிடுகிறார்.

தன்னை துரத்தும் போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக பல மாநிலங்களுக்கும் பல நாடு களுக்கும் பறக்கும் துல்கர்  ஒரு கட்டத்தில் போலீஸை ஓவர்  டேக் செய்து  அவர்களை  பின்தொடர்ந்து செல்லும் முடிவை எடுத்து போலீசிடமிருந்து லாவகமாக தப்பிப்பது நரித் தந்திரம்.

போலீஸ் அதிகாரியாக இந்திரஜித் சுகுமாரன்  நடித்திருக்கிறார். ஹீரோயினாக  ஷோபிதா துலி பாலா நடித்திருக்கின்றனர். துல்கரின் நண்பர்களாக வருபவர்களும் பங்கை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.

மும்பை, பெர்சியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர். நிமிஷ் ரவியின் கேமிரா ஹாலிவுட் தரத்துக்கு லைட்டிங் செய்து காட்சிகளை கண்ணுக்குள் குடியேற்றுகிறது.  சுஷின் சியாம்  இசை  இதமாக ப்யணிக்கிறது.

கேராளாவில் நடந்த ஒரு உணமை சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை உருவக்கப்பட்டிருக்கிறது.  1964, 70,  80கள் காலகட்டங்களில் தொடங்கி  இன்றைய காலகட்டம் வரை படத்தை ஆக்‌ஷன் களத்தை அடிநாதமாக வைத்து விறுவிறுப்பு குறையாமல் இயக்கி இருக்கிறார்  ஸ்ரீநாத் ராஜேந்திரன்.

முதல் பாதியில் சில காட்சிகள் மெல்ல  நகர்வதால் தொய்வு ஏற்படுகிறது/ எடிட்டரின் கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்தால் காட்சிகளின் வேகத்தை கூட்டலாம்.

குருப் : மாறுபட்ட த்ரில்.

Related posts

பவுடர் பட ஆடியோ, டிரெய்லர் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்

Jai Chandran

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

Jai Chandran

Samantha, Naga chaithanya Announces Their Sepration

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend