Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மும்பையில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் லைகர் பட. பாடல் காட்சி

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்சன் படமாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிவருகிறது.

விஜய் தேவரகொண்டா தனது முந்தைய படங்களில், பாடல்களில் பெரிதாக நடனமாடவில்லை. அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகள் அப்படங்களில் இல்லை. ஆனால் இந்த Liger திரைப்படத்தில், உங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படி, அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தவுள்ளார்.

படக்குழு இந்த அதிரடி மாஸான டான்ஸ் பாடலை, மும்பையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் படமாக்க ஆரம்பித்துள்ளது. விஜய்தேவர கொண்டா, சார்மி இருவரும் இதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தில் விஜய் தேவர கொண்டா டான்ஸ் ஆடுவதில், மிக மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இப்புகைப்படத்தை சார்மி கவுர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் உற்சாகத்துடன் வெளியிட்டு, அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்க லாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது..
#liger நடன பாடல் மும்பையில் படமாகிறது. நம்புங்கள் @TheDeverakonda முன்னெப்போதும் கண்டிராத வகையில் நடனமாடியுள்ளார். அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் 😉 பின்குறிப்பு – இந்த ஆணழகனின் நடனத்தை கண்டு, எனது அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சி உணர்வால், பாடல் தந்த உற்சாகத்தால் இந்த டிவிட் பகிரப்பட்டது 😍 @PuriConnects @DharmaMovies ,”
என்று பகிர்ந்துள்ளார்.

இப்படத்தினை Puri connects நிறுவனம், பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாகும் உருவாகும் இப்படத்தை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய அகதாப்பாத்திரங் களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- கேச்சா

Related posts

சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க கேட்டு முதல்வரிடம் மனு

Jai Chandran

வைபவ்-அனகா நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘பஃபூன்’

Jai Chandran

A new teaser out from KanakamKaaminiKalaham

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend