Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அப்பாத்தவ ஆட்டய போட்டுட்டாங்க (பட விமர்சனம்)

 

படம்: அப்பாத்தவ ஆட்டய போட்டுட்டாங்க

நடிப்பு:சந்திரஹாசன், ஷீலா, இளவரசு, டெல்லி கணேஷ், சண்முகசுந்தரம், காத்தாடி ராமமூர்த்தி, ஜெயராவ்

தயாரிப்பு:டாக்டர் ஜே ஜாஸ்மின்

இசை: எஸ்.செல்வகுமார்

ஒளிப்பதிவு: பிரவின்குமார் .என்.

இயக்கம்: என் ஸ்டீபன் ரங்கராஜ்

பி ஆர் ஓ : நிகில் முருகன்

ரிலீஸ்: சோனி லைவ் ஒ டி டி தளம்

பெற்ற தாய் ஹீலாவை வீட்டில் மனைவியின் தொல்லை பொறுக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன்.ஆனால் அவரோ முதியோர் இல்லத்தில் வேண்டாம் வீட்டில் ஒரு மூலையில் அமைதியாக இருக்கிறேன், கொஞ்சம் கஞ்சி ஊற்றினால் போதும் என்று கெஞ்சு கிறார். ஆனாலும் மகன் விடாப் பிடியாக முதியோர் இல்லத்தில் தாயை விட்டுச் செல்கிறார். இந்நிலையில் முதியோர் இல்லத்திலிருக்கும் முதியவர் சந்திரஹாசனுடன் இணைந்து வாழ முடிவு செய்து நண்பர்கள் உதவியுடன் வெளியேறுகிறார் ஹீலா. தாய் ஒருவருடன் ஓடிச் சென்று திருமணம் செய்துகொள்ளப் போவதையறிந்து மகன் அவமானத்தால் வெளியில் தலை காட்ட முடியாது என்று துடிப்பதுடன் தாயை எப்படி யாவது மீட்டு வர முயல்கிறான். இந்நிலையில் சந்திரஹாசனுக்கும், ஷீலாவுக்கும் திருமணம் செய்து வைக்க நண்பர்கள் முடிவு செய்கின்றனர். இந்த விவகாரம் போலீஸ் நிலையத் துக்கு செல்கிறது. இறுதியில் நடந்தது என்பதை உருக்கமுடன் படம் விளக்கு கிறது.

இந்த கலிகாலத்தில் தாய், தந்தையை மதித்து பாதுகாக்கும் பிள்ளைகள் இல்லை என்பதை ஆணித் தரமாக சொல்லும் படம். தன்னை ஏமாற்றி விட்டு ஓடிவிட்டதாக மகன் புலம்பி துடித்து,எப்படியாவது காணாமல் போனவரை கண்டுபிடிக்கும்படி அடியாட்களை அனுப்பி தேடச் சொல்லும்போது மகள்தான் யாருடனோ ஓடிவிட்டார் போலிருக் கிறது என்று எண்ண வைத்து பின்னர் அவரது வயதான தாய் காணாமல் போய்விட்டார் என்ற சஸ்பென்சை உடைக்கும்போது கதையில் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது.

காணாமல்போன ஷீலா,சந்திரஹாசன் ஜோடிக்கு காத்தாடி ராம்மூர்த்தி, டெல்லி கணேஷ்,சண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் அடைக்கலம் தந்து இருவருக்கும் திருப்பதியில் திருமணம் செய்துவைக்கபோடும் திட்டம் சீனுக்கு சீன் நகைச்சுவையை அள்ளித் தெளிக் கிறது.

நாடோடிகள் பாணியில் முதிய ஜோடி களை காரில் ஏற்றி கடத்தி செல்ல டெல்லி கணேஷ் கோஷ்டி எடுக்கும் முயற்சி சிரிப்பு மழை.

போலீஸ் நிலையத்தில் இந்த கோஷ்டி சிக்கிக்கொள்வதும் தாயை அழைத்துச் செல்ல மகன் வந்து அமர்க்களம் செய்வதும் செம கலாட்டா.

இறுதியில் தாய் ஷீலா தன் மகனை வளர்த்த விதம் பற்றி உருக்கமாக பேசி அழும்போது கல்மனதையும் கரைய வைத்துவிடுகிறார்.

சந்திரஹாசன் கடைசியாக வாழ்கையின் தத்துவத்தை விளக்கி புரியவைப்பது அருமை.

டாக்டர் ஜே ஜாஸ்மின் படத்தை தயாரித்திருக்கிறார்.இயக்குனர் என் ஸ்டீபன் ரங்கராஜ் இந்த கால இளைஞர்களுக்கு பெற்றோரின் அருமை புரியும்படி காமெடியுடன் கருத்தாக கதையை அமைத்திருக்கிறார்.

கதைக்குள் வைத்திருக்கும் சிறிய சஸ்பென்ஸ் கதையின் நேர்மையை உணர்த்துகிறது.

எஸ்.செல்வகுமார் இசை அமைத் திருக்கிறார். பிரவின்குமார் .என். ஒளிப்பதிவு ஒ கே.

அப்பாத்தவ ஆட்டய போட்டுட்டாங்க- அம்மாவின் அருமை.

Related posts

ஹே சினாமிகா படத்திலிருந்து காதல் பாடல் வெளியீடு

Jai Chandran

நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று.. ஆயுர்வேத மருந்தில் குணம் அடைந்தார்..

Jai Chandran

கமல்ஹாசனின் “விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend