Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிபி நடிக்கும் மாயோன் டீஸர் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனுடன் ரீலீஸ்

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N. கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகி யுள்ள, இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒரு புதுமையாக  இந்தியாவில் முதல் முறையாக, பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்க ளுக்காக  ஆடியோ விளக்கத்துடன்  டீசர் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொள்ள, பார்வை யற்ற மாற்றுத்திறனா ளிகள் சிறப்பு விருந்தினர் களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பேசிய…
மாற்றுத்திறனாளி இளங்கோ பேசிய தாவது:
இந்த டீசர் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகவுள்ளது. பொதுவாக இது பரவலாக கடைப்பிடிக் கப்படுவதில்லை. ஐநா ஒரு நாட்டை வாழத்தகுதி யுள்ள நாடாக வரையறைக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததா என்ற அடிப்படையில் தான் கணக்கிடுவார்கள். அந்த வகையில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். அது எப்படி நடக்கும் என்றால் அனைவரும் ரசிக்கும் சினிமாவை காட்சிகளை மையமாக கொண்டு வரும் மாற்றுத்திறனாளி களும் ரசிக்க வேண்டும். இந்த படத்தில் டீசரில் வரும் குரலை நான் தான் பேசியுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண்மொழி மாணிக்கம் அவர்களுக்கு நன்றி. வெளிநாடுகளில் முழுப்படங்களிலும் ஆடியோ விளக்கம் தருகிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தனி கருவிகளில் மாற்றுத் திறனாளிகள் மட்டும் ரசிக்கும் படி ஆடியோ விளக்கம் செய்து வருகிறார்கள். அதில் தமிழ்நாட்டில் முன்னோடி யாக அருண்மொழி மாணிக்கம் சைக்கோ படத்தில், முழு படத் திற்கும்  ஆடியோ விளக்கத்துடன் உருவாக் கியிருந்தார். அவருக்கு நன்றி. இஸ்ரோ வின் அனைத்து ராக்கெட் லான்ச்சுக்கும்  விளக்க படத்தில் எனது குரல் பயன்படுத்தப்படுவது எனக்கு பெருமை. அதைத்தாண்டி மாற்றுத் திறனாளிகளுக்காக நம் மக்களுக்காக  குரல் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி.

நக்கீரன் கோபால் அவர்கள் பேசியதாவது:

ஒரு பெரிய பேச்சை கேட்டு நாமெல்லாம் பேசனுமா என்று தோன்றி விட்டது. நமக்கு நிறைய பாடம் எடுத்து விட்டு போய்விட்டார் இளங்கோ. முதலில் இப்படத்தை உருவாக்கிய அருண் மொழிக்கு, குழுவிற்கு நடிகர்களுக்கு அனை வருக்கும் வாழ்த்துக்கள். இந்த புதிய முயற்சி மிகுந்த நம்பிக்கை அளிக் கிறது. டீசர் பார்த்தேன் இளங்கோ அசத்தியிருக் கிறார். இளங்கோ அழைத்தார் என  சொன்ன உடனே,  நான் வர ஒப்புக்கொண்டேன். அவர் பலருக்கு முன்னு தாரணமாக இருக்கிறார். இந்தப்படம் ஒரு பெரிய புதிய முயற்சி. டீசர் படத்தை பார்க்க தூண்டு வதாக இருந்தது. டபுள் மீனிங் என்றவுடன் வேறு மாதிரியாக இருக்குமோ என்று நினைத்தேன், ஆனால் இது வேறுமாதிரி இருக்கிறது. இளங் கோவை இவ்வளவு நேரம் மதித்து பேச வைத்தது மகிழ்ச்சி.  மாயோனுக்கு நக்கீரன் துணையிருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் பேசியதாவது:
சத்யராஜை எப்போதும் மாப்ள, மாப்ள என்று தான் கூப்பிடுவேன். எனக்கு கொரோனா என்ற போது முதலில் அவன் தான் முதலில் போன் செய்து பேசினார். சிபிராஜ் எனக்கு மருமகன் அவருடன் நடிக் கிறேன் என்றபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. சிபிராஜ் அப்படியே அவருடைய அப்பா மாதிரி. வேலையை கச்சிதமாக செய்கிறார். படப்பிடிப்பில் மிக எளிமையாக எல்லோ ருடனும் இணைந்து தங்கினார். சினிமாவில் மிக நன்றாக வருவார். இயக்குநர் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் எஸ் ஏ சி, ரவிக்குமார் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப் பதிவாளர் ராம் பிரசாத் அற்புதமாக செய்துள்ளார். கலை இயக்குநர் பால சுப்பிரமணியன் பெருமாளை தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்.  தயாரிப்பாளர் அருண் மொழி ஸ்பாட்டுக்கு வந்ததே இல்லை, எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் முறையாக ஒரு டீசரை வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். இளங்கோ செயல்களை பார்த்து பிரமித்து அவரை டப்பிங் யூனியனில் கௌரவ உறுப்பினர் ஆக்கினேன். அவர் மகன் கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறான். மாற்றுத்திறனாளிகள் கெடாமல் இருக்க, தமிழ் படங்களில் ஆடியோ விளக்கம் வராமலே இருக்கலாம். டபுள் மீனிங் படங்கள் தான் தமிழில் அதிகம் வருகிறது.  அதனால் சொல்கிறேன். இளங்கோ என அவருக்கு பெயர் வைத்தது கலைஞர் அவர்கள். நான் படமெடுத்தால் நீ தான் பாடுவாய் என்றேன் ஆனால் நான் எப்போது படமெடுக்க போகிறேன் என தெரியவில்லை. இந்த படத்திற்கு மிகப் பெரிய ஆதரவு கிடைக்கும். சிபிராஜ் படத்தில் இது வித்தியாச மான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ் செயன் பேசியதாவது:
இது ஒரு நல்ல காலை. இளங்கோவின் பேச்சு அனைவரையும் கவர்ந்து விட்டது. அருண்மொழிக்கு வாழ்த்துக்கள் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும் மிளிர்ந் துள்ளார். அவர் இயக்கு நராக வேண்டும். இந்தியாவில் முதல்முறை யாக ஆடியோ விளக் கத்துடன் டீசர் வெளியிடு வதாக சொன்னார். எப்போதும் புதுமை செய்யும் மனப்பான்மை தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ நிறைய பணி களை செய்து வருகிறார்.  அவருக்கு என் வாழ்த் துக்கள். நாங்கள் தாண்டவம் படத்தின் சிறப்பு திரையிடலில் கிடைத்த பணத்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு வழங்கி னோம். அதே போல் இப்படத்திலும் செய்ய வேண்டும். சிபிராஜ் இந்த படத்தில் பெரிய அளவில் உழைத்துள்ளார். கிஷோர் நன்றாக இயக்கியுள்ளார். தமிழ் பெண்ணாக தான்யா நிறைய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ பேசியதாவது:
ஆடியோ விளக்கத்துடன் டீசர் வெளியானது எனக்கு மிக மகிழ்ச்சியை தந்துள்ளது. அருண் மொழி முன்னெடுத்தது போல் அனைவரும் முன்னெடுத்து செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டு அனைவரும் இதனை செய்ய வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது:
இந்தப்பட டீசர் பார்த்தேன் மிக ஆச்சர்யமாக இருந்தது. இந்தப்படத்தின் வெற்றி இங்கு எழுதப் பட்டுவிட்டது. அருண் மொழி மாணிக்கம் மிகச் சிறப்பான பணியை செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம். இளங்கோ அவர்கள் பேச்சை கேட்டு ஆச்சர் யமும் மகிழ்ச்சியும் உண்டானது. அவர் என் ரசிகன் என்றார் இன்று அவருக்கு நான் ரசிகnனாகி விட்டேன். இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள் ளார்கள். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி

தன்யா ரவிச்சந்திரன் பேசியதாவது:
இந்தப்படத்தில் என்னை சேர்த்தற்கு அருண்மொழி சாருக்கு நன்றி. சிபிராஜ், ரவிக்குமார் சாருடன் நடித்தது பெருமையாக உள்ளது. இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் சிபிராஜ் பேசியதாவது:
நாம் டிவியில் படம் பார்க்கும் போது கொஞ்சம் ரெசல்யூசன் குறைந்தாலே கவலைப் படுவோம். ஆனால் ஒரு சாரார் மொத்தமாகவே படம் பார்க்க முடியாமல் இருக்கிறார்கள் எனும் போது கேட்க கவலையாக இருந்தது. அவர்களுக்கு ஒரு புது முயற்சியாக ஆடியோ விளக்கத்துடன் டீசர் வரும் படத்தில், நான் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக் கிறது. இதை சாத்தியப் படுத்திய தயாரிப்பா ளருக்கு நன்றி. இசைஞானி இளைய ராஜா இசையில் நடிப்பது கனவு, அது இதில் நடந் துள்ளது. இயக்குநர் கிஷோர் மிக சிறப்பாக கதை செய்திருந்தார். ஆனால் அதை திரையில் ராம் பிராசாத் அட்டகாசமாக கொண்டு வந்துள்ளார். அவர் தெலுங்கில் மிகப்பெரிய படங்கள் செய்துள்ளார். இந்தப்படத்தில் என்னை மிக அழகாக காட்டியுள் ளார். தான்யா மட்டும் தான் நான் நடித்ததில் என் உயரத்திற்கு சரியாக இருந்தவர். அவர் சிறப் பாக நடித்துள்ளார். ராதாரவி சார், ரவிக்குமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் கிஷோர் பேசியதாவது:
மாயோன் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசைஞானி இளைய ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறேன் என்று சொன்னவுடன் படத்தின் கலர் மாறி விட்டது. இதில் எல்லா நட்சத்திரங்களும் மிக அற்புதமாக செய்துள் ளார்கள். பாலாவின் ஆர்ட், ராமின் ஒளிப்பதிவு எல்லாமே சூப்பராக வந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர் களுக்கும் நன்றி. இப்படம் விஷுவலாக சிறப்பான படமாக இருக்கும். இந்தப் படத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு விசயம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. நான் யோசிக்கவே இல்லை ஆனால் அவர்  தனது சைக்கோ படத்தி லேயே இதை செய்திருந் தார். இப்போது இந்தப் படத்திற்கு இதனை செய்ததற்கு நன்றி. இந்தப்படம் ஒரு புதுமை யான படைப்பாக  இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் பேசியதாவது:

நான் தெலுங்கில் நிறைய வேலை செய்தேன் என்று சொன்னார்கள். ஆனால் தமிழில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். சிபிராஜ், தான்யாவுடன் வேலை செய்தது அருமை யான அனுபவமாக இருந்தது எல்லோருக்கும் நன்றி

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசியதாவது:
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இதனை செய்துள் ளோம். இப்படத்தில் அருமையாக உழைத்து படத்தை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ ஆகியோருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.

“மாயோன்” திரைப் படத்தில் சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது காதலி யாக தன்யா ரவிச்சந்திரன் நடித் துள்ளார். இப்படத்தை என். கிஷோர்  இயக்கியுள்ளார். Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசைய மைக்கிறார்.தமிழின் முன்னணி நடசத்திரங் களான கே.எஸ்.ரவிக் குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல  முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள் ளனர்.

 

Related posts

The massive prep behind the action scenes of Jawan!

Jai Chandran

அனைத்து சாதியினர் அர்ச்சகர்: அரசுக்கு கமல் பாராட்டு

Jai Chandran

கைமேரா பட இசை வெளியீட்டு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend