மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2021