Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஷாங் ஜி அண்ட் லெஜன்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ் (பட விமர்சனம்)

லெஜன்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ்
(பட விமர்சனம்)

படம்: ஷாங் ஜி அண்ட் தி லெஜன்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ்
நடிப்பு: சிமு லியு, டோனி லி யுங், ஆவாக்வாபினா, பலா சென்,
தயாரிப்பு: கெவின் பைஜ், ஜோநாதன் ஸ்வார்ட்ஸ்,

இயக்கம்: டெஸ்டின் டேனியல் கிரேட்டன்

யாராலும் வீழ்த்த முடியாத சக்தி தரக்கூடிய டென் ரிங்க் ஸ் அடையும் வில்லன் அதைக்கொண்டு உலகில் எல்லோரையும் எதிர்த்து போரிட்டு ஆட்டிப்படைக் கிறான். கடவுளிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவரிடம் பயிற்சி பெறும் காட்டுக்குள் இருக்கும் ரகசிய கிராமத் துக்கு சென்று அந்த சக்தியை அடையவும் எண்ணுகிறான். அடர்ந்த காட்டுக்குள் செல்லும் அவனை வழிமறிக்கும் பெண் திரும்பி செல்லும்படி எச்சரிக்கிறார். அதை ஏற்க மறுத்து அவளுடன் வில்லன் சண்டை போடுகிறான். அந்த மோதலில் அவன் தோற்றாலும் இருவருக்கும் காதல் மலர்கிறது. இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்
வேற்று இனத்தவனை மணந்ததால் அப்பெண்ணை சிலர் கொல்கின்றனர். இதில் கோபம் அடைந்த வில்லன் தன் மனைவியை கொன்ற கிராமத்து மக்களை கொல்ல முடிவு செய்கிறான். அந்த திட்டத்துக்கு தனது மகனை பயன்படுத்த எண்ணுகிறான். அவனோ மறுத்துவிடுகிறான். கோபம் அடையும் தந்தை, மகனை சிறையில் அடைக்கிறார். அங்கிருந்து தப்பி தன் தாயின் கிராமத்துக்கு செல்கிறான் மகன். அவனை கிராமத்தினர் ஏற்கின்றனர். இந்நிலையில் தந்தை அந்த கிராமத்துக்கு படையின ருடன் வந்து சேர்
கிறார். அதன்பிறகு நடந்தது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

ஆக்ஷன் , ஃபேண்டஸி கலந்து கதையாக உருவாகி இருக்கிறது இப்படம். ஆயிரம் ஆண்டுகள் வாழும் வில்லன், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான டேலோ காட்டு கிராமம், நகரும் காடுகள், அதிசய விலங்குகள், ராட்சத இருள் அரக்கன், கடவுள் டிராகன் என கற்பனைக்கு எட்டாத கதைகளை சொல்லி யிருக்கும் இயக்குனர் அதனை கண்முன் நிஜத்தில் திரையில் அரங்கேற்றி இருப்பதும் அட்டகாசம்.

ஆக்ஷன் நிறைந்த ஜாக்கி சான் படங்களை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டதே என்று எண்ணும் ஆக்ஷன் பிரியர்களுக்கு இப்படம் செம விருந்தளிக்கிறது.
ஜாக்கிசான் போலவே சண்டை காட்சிகளில் மோதி யிருக்கும் சிமு லுயு வின் அதிரடி அட்டகாச சண்டை களில் அனல் பறக்கிறது.
பஸ் சண்டை, இரும்பு கூண்டுக்குள் சண்டை, டிராகனில் பறந்தபடி சண்டை என தூள் பரத்துகிறார்.
ஹீரோவின் தந்தையாக வரும் வில்லன் பாத்திரமும் வலுவானது. அவரது ஆக்ரோஷ சண்டைகளிலும் வேகம் உள்ளது.

தமிழ் படங்கள் போலவே அம்மா சென்டிமென்ட் உள்ளடக்கிய ஸ்கிரிப்ட்டை ஆக்ஷன் காட்சிகளுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர்.

சீன மொழிப் படமான இதனை தமிழில் கச்சிதமாக டப்பிங் செய்திருக்கின்றனர். நேரடி தமிழ் படம் பார்ப்பதுபோலவே காமெடி காட்சிகளையும் அமைத் திருப்பது கலகலப்பு.

Related posts

Prime Video Launches the Much-Awaited Trailer of Actor Suriya Starrer Jai Bhim 

Jai Chandran

பிரதமர் மோடிக்கு நடிகர் உதயா கோரிக்கை கடிதம் அனுப்பினார்

Jai Chandran

வேல்ஸ் ஃபிலிம் வெளியிட்ட புதுபடங்கள் அறிவிப்பு வீடியோ

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend