Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

19ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு; இரவு 9மணிவரை கடைகள் அனுமதி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் 19ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு 19-7-2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படு கிறது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக் கப்படுவர். நோய் கட்டுப் பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப் பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப் படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் நாளை முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப் படும்.

மேலும், கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, புதுச்சேரிக்கான பஸ் சேவை தொடங்கப் படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலை வாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப் படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனை களுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில், கை சுத்திகரிப் பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோ தனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர் களும், வாடிக்கையாளர் களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குளிர்சாதன வசதி பயன் படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படு வதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப் பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்க ளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப் பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரை யறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறை களின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல் பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடு களுக்கு அனுமதி இல்லை.

நோய் கட்டுப்பாட்டு பகுதி களில், நோய்த்தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடு களுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகிய வற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோய் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக் கப்படுவது கண்காணிக் கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரண மாகவே நோய்த்தொற்று குறைந்து வந்துள்ளது என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

Kavin & Gorgeous Reba John Team up for a Web Series

Jai Chandran

91-வது பிறந்த நாள்: K.B.R.S.குழுவினர்கள் கவனத்திற்கு:

Jai Chandran

எம் ஜி ஆர் பட டைட்டில் படத்தில் சென்சார் போட்ட கத்திரி: இயக்குனர் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend