Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அண்ணாத்த படத்துக்காக 15 கிலோ எடை குறைத்த நடிகர் பாலா

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு  நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.

பிறகு நடிகர் பாலா பேசினார். அவர் கூறியதாவது:

தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணைத்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் பாலா அடுத்து தன் அண்ணன் சிறுத்தை  சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  நடித்துக்கொண்டி ருக்கும் ‘அண்ணாத்த’ படம் குறித்து சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.


இதுவரை 50க்கும் மேலான படங்களை ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் அண்ணாத்த படம்  எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இப்படத்திற்காக 15கிலோ எடை குறைத்திருக்கிறேன். மேலும் நான் ஒரு ரஜினி ரசிகன், அருகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர் அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார். அமைதியாக அமர்ந்திருக்கிறாரே என நினைத்தால் நம்மை  கடந்து செல்கையிலேயே நம்மைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லி விளையாட்டுத்தனமாக குறும்பு செய்துவிட்டு செல்வார். காமெடி உணர்வு அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தொடர்ந்து தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக அதையே நான் விரும்புகிறேன்’.

 

இவ்வாறு நடிகர் பாலா கூறினார்.

நிகழ்ச்சிக்கு வந்த பாலாவை சங்க தலைவர் எஸ்.கவிதா, செயலாளர் எம்.பி.ஆப்ரகாம் லிங்கன், பொருளாளர் டி.ஜே. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று நினைவு பரிசு வழங்கினர்.

Related posts

FOX STAR STUDIOS IS NOW *STAR STUDIOS

Jai Chandran

ஹரி இயக்கத்தில் வெடிக் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கும் புதிய படம்

Jai Chandran

மக்கள் நீதி மய்யம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend