Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு. க. ஸ்டாலின்: தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க வாழ்த்து

மக்களின் ஆதரவோடு ஆட்சியில் அமரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி சிறக்கட்டும் – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் குறிப்பாக இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட திமுக தலைவர், தமிழக முதல்வராக பதவியேற்கவிற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

உலகமே அச்சத்தில் சிக்கி தவிக்கும் இந்த வைரஸ் கால கட்டத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பி ஆட்சியை அளித்திருக்கிறார்கள்.

சொல்லொண்ணா துயரங்களை கடந்து மக்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையைப் போல பத்திரிகை துறையினரும் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

ஜனநாயகம் காக்கப்பட பறி போன மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்பட தமிழ் மொழியின் மகத்துவம் போற்றப்பட உங்கள் தலைமையில் தமிழகம் நிமிர்ந்து நடக்க, பணி சிறக்க தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA) நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறது.

திரைப்பட பத்திரிகையாளர் நலவாரியம் அமையும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

அன்புடன்
நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்( TMJA ), சென்னை.

Related posts

Vijay Sethupathi – Soori starrer ‘Viduthalai’ release in two parts

Jai Chandran

நடிகர் சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது

Jai Chandran

Actress Samantha Akkineni to launch First song from Thalaivi in all three languages

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend