Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பத்மஸ்ரீ விவேக் ஆரம்பித்த நற்பணிகள் தொடரும்: பசுமை கலாம் அமைப்பு

பத்மஸ்ரீ விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர் மறைந்தாலும் அவர் செய்து வந்த நலத்திட்டப்பணிகள் எந்தவித தொய்வின்றி நடக்க இருக்கின்றது.

கடந்த பதிமூன்று வருடங்களாக தமிழகமெங்கும் இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் திரு.விவேக் அவர்களால் நடப்பட்டிருக்கின்றன. இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.


இந்தக்குழுவில் .செல் முருகன், தயாரிப்பாளர் .லாரன்ஸ், அசோக் மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இதையே தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக்  பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய பெயர் மாற்றத்தோடு விவேக்கின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இவ்வாறு பசுமை கலாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’

Jai Chandran

Rashmika reveals first look of ‘Yamakaathaghi’

Jai Chandran

லால் சலாம் படத்தில் மக்களை சார்ந்த அரசியல்: ஐஸ்வர்யா ரஜினி பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend