Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாநத் நடிக்கும் அண்ணாத்த பட ஷூட்டங்  மீண்டும் தொடங்கி நடக்கி றது.  இதில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

கொரோனா காலகட்டத்தால் கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு தளர்வில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது, ரஜினிக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படிருந்தது. ரஜினிகாந்த ஓய்வு எடுத்து வ்ந்தார் பின்னர் உடல்நலம் குணமான நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்தார். இதற்கிடையில் சமீப்பத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் அவர் வாக்கு பதிவு செய்தார்.

தற்போது மீண்டும் அண்ணாத்த  படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாக அறிவித்துள்ள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்படி படப்பிடிப்பு  நடத்தவும் அறிவுறுத்த;ப்பட்டிருக்கிறது.

Related posts

“மாமனிதன்” விழாவில் இளையராஜா பற்றி சீனு ராமசாமி பரபரப்பு பேச்சு

Jai Chandran

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர் வெளியானது

Jai Chandran

Actress Amala Paul granted GOLDEN VISA by DUBAI GOVERNMENT

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend