Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகில், யோகி பாபு நடிக்கும் ”எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா”

நிலா ப்ரமோட்டர்ஸ் , TN75 K K கிரியேஷன்ஸ் , ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரிக்கும் படம் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” கல்லூரி அகில், சதுரங்க வேட்டை இஷாரா நாயர்,  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா,  சூப்பர் சுப்பராயன்,  கௌசல்யா மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் சன் டிவி பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் வரும் மார்ச் 26 முதல் உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.

கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று மன தொய்வடையும் போது  தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவருடைய உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை..

ஒளிப்பதிவு ரஹிம் பாபு.. இசை வர்ஷன், ஜெய்டன்.. எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.. சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன்..  கலை ஜான் பிரிட்டோ.. கவிஞர் முகையூர் முத்து,. சக்தி செல்லம், வைரபாரதி, பாண்டி செல்லம்.. பாடகர் காகா பாலச்சந்தர், மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணகுமார்..

நிலா ப்ரமோட்டர்ஸ், TN75 KK கிரேஷன்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன் இவர்களுடன் இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வைஸ்லின் இணைந்து  தயாரிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்  இயக்குனர் கெவின்..

Related posts

சத்தியமங்கலம் காட்டில் விஜய்சேதுபதி-சூரி படப்பிடிப்பு..

Jai Chandran

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ரூட்” (ROOT) படப்பிடிப்பு நிறைவு!

Jai Chandran

Kichcha Sudeep’s ‘Vikrant Rona: RECORD BREAKER OVERSEAS DISTRIBUTION

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend