Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது

சூர்யா நடித்திருக்கும் சூரரைப்போற்று படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்கிறது.

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படமான ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அபர்ணாவின் எதார்தம், டைரக்டர் சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையா ளர்களை ஆச்சரியப்படுத் தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங் களில் அதிகம் பேரால் பார்க் கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத் தது.
தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகை யில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்த லால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.
அந்த வரிசையில் பொதுப் பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக் குநர், சிறந்த இசையமைப் பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவு களிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.


இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறை யில் அப்லோட் செய்யப்பட் டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப் படம் ஆஸ்கர் குழு உறுப்பி னர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக் குழுவினர் மிகுந்த நம்பிக் கையுடன் உள்ளனர்”
இந்த தகவலை சூரரைப் போற்று படத்தின் இனை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related posts

தீபாவளி ரேஸில் கவனம் ஈர்த்த ரிஷியின் “மரிஜீவானா” திரைப்படம் !

Jai Chandran

Keerthy Suresh and Radhika Apte in Akka

Jai Chandran

Gopichand special poster of Pakka Commercial

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend