Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேன் படம் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்வு..

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்ற படம் தேன். இதில் தருண்குமார், அபர்ணிதி, அனுஸ்ரீ. பாவா லட்சுணன் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன், அம்பலவாணன், பிரேமா தயாரித்திருந்தனர்.  சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். கணேஷ் விநாயகன் இயக்கி இருந்தார். இப்படம் இந்தியன் பனோராமாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பட இயக்குனர் கணேஷ் விநாயகம் தெரிவித்துள்ளதாவது:

ஊடகத்துறை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம். பல்வேறு காலகட்டங்களில் என்னை ஊக்கப் படுத்திய பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இயக்கியிருக்கும் தேன் திரைப்படத்தை பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியில் பார்த்து ரசித்த அனைத்து ஊடக, பத்திரிக்கை, வானொலி, இணையதள நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தேன் திரைப்படம் பல அர்வதேச விருதுகளை பெற்று வரும் வேளையில் கூடுதலாக 51வது சர்வதேச இந்தியன் பனோரமா விருதிற்கு தேர்வாகி உள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர்
கணேஷ் விநாயகன்

Related posts

FilterGold to be released on Oct 22nd in Theatres

Jai Chandran

’தலைவி’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கங்கனா உருக்கமான பேச்சு

Jai Chandran

விஜய் சேதுபதி 51 படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend