படம்: 99 சாங்ஸ்
நடிப்பு: ஏஹன் பட் பட், எடில்சி வர்காஸ். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே
தயாரிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான்
இசை: ஏ.ஆர்.ராஹ்மான்
ஒளிப்பதிவு: தானே சதம். ஜேம்ஸ் கவுலே
இயக்கம்: விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி
ரிலீஸ்: ஜியோ ஸ்டூடியோஸ்
இசை மீது தனியாத ஆர்வம் கொண்டவர் ஏஹன். பெற் றோர் இல்லாமல் தனிமையில் வாழ்கிறார். அவரது இசைக்கு ரசிகையாகிறார் எடில்சி. காதல் வளர்கிறது. திருமணம் செய்து கொள்ள எண்ணுகின்றனர். அப்போது எடில்சியின் தந்தை ஆட்சேபம் தெரிவிக்கிறார். ஏஹனை அழைத்து பேசி சில கண்டிஷன்போடுகிறார். 100 பாடல்கள் பாட வேண்டும் அதில் ஒரு பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆக வேண்டும் என்கிறார். அதற்கு ஒப்புக்கொள்கிறார் ஏஹன். அவரால் அந்த கண்டிஷனை நிறைவேற்ற முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.
இந்த கதையை மிகவும் சிம்ப்ளாகசொல்ல வேண்டு மென்றால் அம்பிகாபதி, அமராவதி கதை போன்றது. அமராவதியை மணக்க வேண்டுமென்றால் அம்பிகாபதி 100 பாடல்கள் பாட வேண்டும் என்று மன்னர் கண்டிஷன்போடுவார். இது புரான கால கதை, 99 சாங்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான் கால கதை.
படம் தொடங்கியது முதல் இறுதிவரை ஹாலிவுட் படத்தை பார்ப்பதுபோன்ற ஒரு பிரம்மை அரங்கு முழு வதும் படர்கிறது.
இளம் நாயகனாக அறிமுக மாகி இருக்கும் ஏஹன் நடிப்பு மற்றும் இசை பயிற்சியை நன்கு எடுத்திருப்பது காட்சி களில் பிரதிபலிக்கிறது. ஏஹன், பியனோ கருவியை இசைக்கும் பாங்கி பர்பெக்ட் மேட்சிங்
ஏஹன் காதலி எடில்சி அழகான முகவெட்டுடன் கவர்கிறார். 100 பாடல்களை எழுதுவதற்காக தனது நண்பருடன் அவரது ஊருக்கு செல்லும் ஏஹன் திடீரென்று அங்குள்ள பாடகி ஒருவருடன் தொடர்பில் இணைவது புதிய டிராக்காக செல்கிறது. இவர் கள் இருவரும் காதலிக்கிறார் களா? லிவிங் டு கெதர் பாணி யில் வாழ்கிறார்களா? என்பதில் குழப்பம் ஏற்படு கிறது.
காதலை சுற்றி சென்றுக் கொண்டுருக்கும் காட்சிகள் திடீரென போதை மருந்து விவகாரத்துக்குள் நுழைகிறது. ஏஹன் போதை மருந்தை அதிகமாக உட்கொண்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கு பின்னர் விடை கிடைக்கிறது.
ஏஹன் தந்தை தனது குடும்பம் இசையால் அழிந்தது என்று சொல்வது ஏற்க முடியவில்லை. அவர் விரும்பித்தான் பாடகியை மணக்கிறார். பின்னர் அவருக்கு கிடைக்கும் பாராட்டை கண்டு ஈகோ கொள்கிறார். இனி பாடக்கூடாது என்ற் இசை கருவிகளை அடித்து நொறுக்குகிறார். இங்கு கணவரின் ஈகோதான் குடும்பத்தை அழிக்கிறது என்ற ஒரு விளக்கம் தந்திருந்தால் காட்சி நிறைவு பெற்றிருக்கும்.
ஏஹன் 100 பாடல்கள் கண்டிஷனில் வெற்றி பெற்ற பிறகு இசை என்ற தனி உலகத் துக்கு பயணிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை கொள்ளை கொள்கின்றன.
முழுக்க முழுக்க ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழையில் நனைவதற்கு ஒரு வாய்ப்பு இப்படம். தென்றலும் வீசுகிறது, புயலும் அடிக்கிறது. கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி உள்ளார்.
99 சாங்க்ஸ்- ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வு.