Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சம்பளம் குறைத்த ஹரீஷ் கல்யாண்

சம்பளம் குறைத்த ஹரீஷ் கல்யாண்!

ஊரடங்கு நிலை ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்குண்டிருக்கிறது. அடுத்து என்ன என்ற ஊகிக்க முடியாத நிலையில், தயாரிப்பாளர்களின் நலன் கருதி நடிகர் ஹரீஷ் கல்யாண் தன் ஊதியத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து விவரித்த ஹரீஷ் கல்யாண், “கோவிட் 19 என்ற பெருந் தொற்று நோய் அனைத்து தொழில் களையும் முடக்கிப்போட்டதுடன், அனைவரையும் இருண்ட நிலையில் இருத்தியிருக்கிறது. குறிப்பாக ‘ஷோபிஸ்’ என்று சொல்லப்படும் இந்த திரைப்படத்துறை மிகப் பெரும் மூலதனத்துடன் செயல்பட்டாலும், எதிர்பாராத இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக் கிறது. இந்தச் சூழலில் அடுத்து நான் நடிக்கும் படங்களுக்கு எனது ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வ தென முடிவு செய்திருக்கிறேன்.
இந்த கஷ்டமான கால கட்டத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று ஒருங் கிணைந்து, இந்தக் கடும் புயலை வலிமையுடன் எதிர் கொண்டு கரை சேர வேண்டும். இந்தநிலை விரைவில் மாறி, திரைத் துறை முன்புபோல் மீண்டும் செயல்படும் என்று நம்புவதுடன் அதற்காக இறை வனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

#harishkalyan cutting down  remuneration for upcoming project

Related posts

Web Series Titled KUTHUKKU PATHTHU: Vijay Varatharaj Direction

Jai Chandran

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கின் வில்லனாக விஜய் சேதுபதி: போஸ்டர் வெளியீடு

Jai Chandran

Nani’s Hi Nanna Trailer On Nov 24th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend