Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் மன்றம் ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை

அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்  பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்புடைய இயக்க தோழர்களுக்கு வணக்கம் !

சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது *தளபதி* அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது *தளபதி யுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத் தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள்/இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப் போது தளபதியின்  அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தி யுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதியின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு புஸ்ஸி என். ஆனந்து கூறியுள்ளார்.

Related posts

லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கியது.

Jai Chandran

’சிம்மராசி’ பட இயக்குனர் ஈரோடு சவுந்தர் காலமானார்..

Jai Chandran

நித்தம்’ போட்டோ கண்காட்சி பெரிய வலியின் எழுச்சி- மிஷ்கின்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend