கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் முதல் திரையுலகம் வரை எல்லாம் முடங்கியது. சுமார் 6 மாதத்துக்கும் மேலாக நீடித்த ஊரடங்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. திரை அரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டிருந்த நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின.
திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு அக்டோபர் மாத வாக்கில் தியேட்டர்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 50 சதவீத டிக்கெட் மட்டும் அனுமதிக்கப்பட்டது. பிறகு மத்திய அரசின் அறிவிப்பால் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கப்பட்டது..
விஜய் நடித்த மாஸ்டர் படம் 100 சதவீத டிக்கெட் அனுமதியுடன் ஓடி வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. அதன்பிறகு 100 சதவீத அனுமதியுடன் 2021ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வரை தியேட்டர்கள் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதாகவும் நோய் தொற்றுக்குள்ளா பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் சுகாதார துறை கூறிவரும் நிலையில் வரும் 10ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படிஏப்ரல் 10ம் தேதிமுதல் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது,. தவிர படப் பிடிப்பு தளங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் முககவசம், சேனிடைசர், வெப்ப நிலை சோதனை, சமூக இடைவெளி, கொரோனா பரிசோதனை போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.