Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

50 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி..

50 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி..

அமைச்சரிடம் நேரில் வேண்டுகோள்

50படங்களின்படங்களின் படப்பிடிப்பு தொடங்கினால் 10ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் இன்று செய்தி துறை அமைச்சரை கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து . ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :

முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்க வில்லை. தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கி யுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ் வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறி யுள்ளது.தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர் களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதேபோல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கி றோம்.
11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்த னையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியா ளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம்.
ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகி றோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத் துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர் களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கை யை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
அமைச்சரை தயாரிப்பாளர் கள் டி. சிவா, மனோபாலா, பி எல் . தேனப்பன், ஜே எஸ் கே . சதிஷ் குமார், ஜி. தனஞ் செயன், ஆர் கே . சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்

#Filmmakers seek permission to resume film Shooting

Related posts

Dada Saheb Phalke Film Festival Best Actor Tharunkumar

Jai Chandran

Skyman Films Production NO 2 titled as IdiMuzhakkam

Jai Chandran

கட்சத்தீவு மீட்க பிரதமருக்கு இயக்குனர் வடிவுடையான் கடிதம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend