Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பாராசூட் (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: பாரா சூட் (வெப் சீரிஸ்)

நடிப்பு: கிஷோர், கிருஷ்ணா, கனி,, காளி வெங்கட், சக்தி,  இயல், பவா செல்லதுரை, சரண்யா

தயாரிப்பு: ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஓம் நாராயண

இயக்கம்: ராசு ரஞ்சித்

பிஆர்ஓ; சதீஷ் (AIM)

வீட்டுக்கு வீடு சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்கிறார் கிஷோர். இவரது மனைவி கனி. இவர்களுக்கு வருண் (சக்தி), ருத்ரா ( இயல்)  என இரண்டு குழந்தைகள். வருண் குறும்புத்தனம் மிக்கவன் ஆனால் தந்தைக்கு பயந்தவன். ஒரு சமயம் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தொலைத்து விட வீட்டுக்கு சென்றால் அப்பா அடிப்பார் என்பதற்காக தொலைந்த பைக்கை தேடுவதற்காக தங்கையுடன் தெருத் தெருவாக சுற்றுகிறான. நீண்ட நேரம் குழந்தைகள் காணவில்லை என்பதால் பயந்த  கிஷோர் போலீசில் புகார் தருகிறார். ஒரு பக்கம் போலீஸ் குழந்தைகளை தேடுகிறது. அந்த குழந்தைகள் ஊரைத் தாண்டி மாவட்டத்தை தாண்டி மாநிலத்தை தாண்டி சென்று விடுகிறார்கள். அப்போது ஒரு பெரிய கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரத்தில் சிக்கிய குழந்தைகள் கதி என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

எளிமையான கதைதான் ஆனால் உணர்வுள்ள உயிர்ப்புள்ள  கதையாக உருவாகி இருக்கிறது பாரா சூட். .

தன் தந்தையின் வண்டிக்கு பாரா சூட் என்று பெயர் வைக்கும் குழந்தைகள் அந்த வண்டியை எடுத்துக் கொண்டு போய் தொலைத்து விட்ட பிறகு கதை திசை மாறி எங்கெங்கோ பயணிக்கிறது. இப்படித்தான் இந்த கதை சொல்லப்போகிறது என்று ஓரளவுக்கு கணித்தாலும் அதையும் மீறி காட்சிகள் எதிர்பாராத  திருப்பங்களை கண்முன் நிறுத்தி அடுத்து என்ன நடக்குமோ என்று பதற வைக்கிறது.

கிஷோர் மனைவியாக நடித்திருக்கும் கனி ஒரு தாயின் பரிதவிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணா நேர்மையான போலீசாக வந்து நெஞ்சை தொடுகிறார்

சிறுவன் வருண். சிறுமி இயல் எதார்த்தம் மாறாமல் தத்ரூபமாக நடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதுவும் கர்நாடகா பார்டரில் உள்ள காட்டுப்பகுதியில் நள்ளிரவில் வருண், இயல் இருவரும் முரடர்களிடம் சிக்கிக்கொண்டு  நடுங்குவதும், எங்கு செல்கிறோம் என்பது கூட அறியாமல் காட்டுக்குள் இருவரும் தனியாக நடப்பதுமாக  திக் திக் கிளப்புகிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிருஷ்ணா கொஞ்சம்  கறார் காட்டி நடித்திருக்கிறார்.

கிளைமாக்சில் நடக்கும் காவிரி நீர் கலவரக் காட்சி பம்பாய் படத்தின் கிளைமாக்ஸ் ஞாபகப்படுத்துகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்க ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது.

ராசு ரஞ்சித் அதிக பிரசங்கித்தனம் எதுவும் செய்யாமல் ஒரு எளிய குடும்பத்தில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்க்கும் அனுபவமாக இயக்கி காட்டி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா வெப்சீரிசுக்கு ஏற்ற முறையில் பக்குவ இசை அமைத்திருக்கிறார்.

ஓம் நாராயண கேமரா ஜிமிக்ஸ் வேலைகள் எதுவும் செய்யாமல் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.

பாரா சூட் வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

பாராசூட் ஒட்டுமொத்த  குடும்பத்திற்கும் ஏற்ற வெப் சீரிஸ்

 

 

 

 

 

Related posts

Kurup, India’s longest hunted fugitive.

Jai Chandran

Suriya 40 First Look on July 22

Jai Chandran

Moonu Muppathi Moonu is All set to Release on December 3rd

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend