Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா வீண் பயம்.. மன்சூரலிகான் அறிக்கை

கொரோனா வீண் பயம்..
மன்சூரலிகான் அறிக்கை

நடிகர் மன்சூரலிகான் படங்களும் தயாரித்து கொரோனா ஊரடங்கு பற்றியும், டிவி ஷூட்டிங் அனுமதி பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் அறிக்கை வருமாறு :
தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே எதிர் கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தி என்பது இயற்கையி லேயே அதிகமாக உள்ளது.
கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது
தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித் தால், இரண்டு நாட்களிலேயே காணாமல் போய் விடுகிறது. மேலும், தூது வலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.

இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வா தாரமும், வாழ்வும் கேள்விக் குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.
சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல் பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய
மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவால யங்கள் மற்றும் கோவில் களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு மன்சூரலிகான் கூறி உள்ளார்.

#mansooralikhan statement lockdown
#மன்சூரலிகான்

Related posts

Aadhi Pinisetty to lock horns with Ram Pothineni’s in RAPO19

Jai Chandran

சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ பட டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

என் பாடல்களில் தரம் இருக்கும்- கவிஞர் தரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend