Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கருப்பு (பட விமர்சனம்)

படம்: கருப்பு

நடிப்பு: சூர்யா, திரிஷா, ஆர் ஜே பாலாஜி, நட்டி, இந்திரன், சுவாசிகா, ஷிவதா, வேல ராமமூர்த்தி

தயாரிப்பு: எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு

இசை: சாய் அபயங்கர்

ஒளிப்பதிவு : ஜிகே விஷ்ணு

இயக்கம்: ஆர் ஜே பாலாஜி

பிஆர்ஓ : சதீஷ் S2 மீடியா

கதை : கேரளாவிலிருந்து மகளுக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்வதற்காக நகைகளுடன் பெரியவர் புறப்பட்டு சென்னை வருகிறார். அவர்களிடம் வழிப்பறி நடத்தி இரண்டு பேர் நகைகளை கொள்ளை அடித்து செல்கிறார்கள். தந்தையும் மகளும் போலீசில் புகார் செய்கின்றனர் . போலீஸ் விசாரித்து நகைகளை ஓரளவுக்கு மீட்கிறது. ஆனால் அந்த நகைகளை கோர்ட் மூலம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். இதையடுத்து கோர்ட்டை அணுகி நகையை மீட்க தந்தையும் மகளும் முயல்கின்றனர். ஆனால் அதில் பல்வேறு சிக்கல்கள் முளைக்கின்றன. களவாணி வக்கீல் ஆர்.ஜே பாலாஜி கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு வழக்குகளில் தில்லுமுல்லு செய்கிறார். அந்த நேரத்தில் ஒரு வித சக்தியுடன் வழக்கறிஞராக சூர்யா ஆஜராகிறார். அவரிடம் கடவுள் பவர் இருக்கிறது. அது என்ன? அந்த பவரை வைத்து  சூர்யா என்ன செய்கிறார் என்பது தான் கிளைமாக்ஸ்.

சூர்யா வக்கீல் உடை அணிந்து வரும்போது ஜெய் பீம் படத்தில் அவரை வக்கீலாக பார்த்த ஞாபகம் பட்டென வந்து செல்கிறது. தந்தையும் மகளும் நகை மீட்க கோர்ட்டில் போராடும் காட்சிகளில் அவர்களின் பரிதாப நிலை  சோகத்தை ஏற்படுத்துகிறது

சூர்யா திடீரென்று தந்தை மகள் சார்பில் ஆஜராகி நீதிபதி நட்டியிடம் குரல் உயர்த்தி பேசுவதும் அதுவே அந்த வழக்கிற்கு பெரிய சிக்கலாக மாறுவதும் எதிர்பாராத ஷாக்.

சூர்யாவை பொறுத்தவரை அவரே கருப்பு சாமியாக வருவது புல்லரிக்க வைக்கிறது. கையில் அறிவாள் ஏந்தி ஆவேசமாக நடனமாடும் காட்சி தியேட்டர்களில் ஆண்களை கூட சாமியாட வைத்து விடும்.

திரிஷா மற்றொரு வழக்கறிஞராக வருகிறார். கதாபாத்திரத்தில் பந்தா காட்டாமல் எளிமையான நடிப்பை வழங்கி நெஞ்சில் பதிகிறார்.

இதுவரை ஆர்ஜே பாலாஜி தான் நடித்த படங்களில் ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார் இந்த படத்தில் அவரே பிரதான வில்லனாக நடித்திருப்பது புதிய களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி இந்த மூன்று கதாபாத்திரங்கள்தான் படத்தில் பிரதான பாத்திரங்கள்.

நீதிபதியாக நட்டி நடித்திருக்கிறார். இப்படி கூட நீதிபதி இருப்பாரா என்று எண்ணும் அளவுக்கு தில்லு முல்லு செய்யும் ஆர்ஜே பாலாஜிக்கு உடந்தையாக இருப்பது அதிர்ச்சி.
ஒரு கட்டத்தில் ஆர்.ஜே பாலாஜி, நட்டி முன் கோர்ட்டில் பொய் சொல்லி வாதாட முற்படும்போது வாய் குழறி உண்மையை சத்தமாக பேசுவது அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்தி அல்லோ கல்லப்பட வைக்கிறது.

இந்திரன், சுவாசிகா ஷிவதா, வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்கள்.

ஆர் ஜே பாலாஜி படத்தை மூக்குத்தி அம்மன்  பாணியில் சாமி சென்டிமென்ட் வைத்து இயக்கி  இருக்கிறார். ஆனால் முழுக்க சட்டம்,  வழக்கு என்று செல்கிறது.  கதையில் இன்னும் கூட கிளைக்கதைகளை சேர்த்திருந்தால்  இன்னொரு களமும்  படத்திற்கு கிடைத்திருக்கும்.

சாய் அபயங்கர் இசை, சாமி ஆட வைக்கிறது.

ஒளிப்பதிவாளர்  ஜிகே விஷ்ணுவின் கேமரா, மாடர்ன் மற்றும் ஆன்மீகம் என  இரு வேறு உலகத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்கிறது.

கருப்பு – இது சூர்யாவின் கந்தாரா.

Review By

K.Jayachandhiran
trending cinemas now. com

 

Related posts

சரண்ராஜ் இயக்க மகன் தேவ் நடிக்கும் “குப்பன்”

Jai Chandran

Massive Response for Legend Saravanan power-packed Leader Teaser..

Jai Chandran

இந்தியா முழுவதும் நாளை ஊரடங்கு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend