ஹர ஹர மஹாதேவகி பாடலாசிரியரின் விசித்திர அசுரா..
பார்த்திபன் நடித்த அழகி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சொற்கோ கருணாநிதி. ‘மொட்ட சிவா கெட்ட சிவா – படத்தில் ஹர ஹர மகாதேவகி..’ பாடல் எழுதினார்.
அரசு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் கருணாநிதி கொரோனா பற்றி கவிதை எழுதி உள்ளார். அது வருமாறு :
விசித்திர அசுரா–
விஷ பாட்டில் கடைகளை மூடவைத்தாய்
வீடுபேறு அனைவரையும் தேட வைத்தாய்
விபத்தில்லாச் சாலைகளைத் தொடங்க வைத்தாய்
விண்முட்ட நின்றவனை அடங்க வைத்தாய்
விமானத்தில் வேதனையாய் நீ குதித்தாய்
வித்தியாச விதிகளினை நீ விதித்தாய்
ஆட்டி வைத்த – கூட்டத்தைப் போய் மிதித்தாய்
அப்பாவி மக்களைப் போய் ஏன் சிதைத்தாய்
சுத்தமே அத்தனை முக்கியம் என்பதைச் சப்தமின்றி உரைத்தாய்
சூரனே வீரனே என்கிற பெயர்களைத் தாறுமாறாய்க் கிழித்தாய்
நிரம்பியே வழிந்திடும் நெரிசலே இல்லாத நிம்மதியைப் படைத்தாய்
கரும்புகைக் கக்கிய காற்றினை நீக்கிய காட்சியினை வடித்தாய்
கோயில் மசூதியில் ஆலய கடவுளர்க்குக் கொஞ்சம் நாள் ஓய்வு கொடுத்தாய்
கும்பிடும் கடவுளை மருத்துவர் காவலர் ஏவலரில் குழுவிலே நீ படைத்தாய்
சிவனா மெதினா சிசுபாலலா வடிவினை வீட்டினிலே நீ வடித்தாய்
கொரனா என்கிற எமனா அசுரனே நீ வெளி யிடத்தைப் பிடித்தாய்
இவ்வாறு கவிதையில் கூறியுள்ளார்
#lyricisit karunanithi wrote poem about corona vairus
#azhagi #ilayaraja
#Mottasivakettasiva
#கவிஞர்கருணாநிதி
#அழகி #இளையராஜா #பார்த்திபன்