விக்னேஷ் சிவன் எழுத அனிருத் இசையில் யுவன் பாடினார்..
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய, ’அந்த கண்ண பாத்தக்கா..” என்ற பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. அனுரூத் இசையில் இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தி லிருந்து வெளியான ஒரு குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங். வாத்தி ரெய்டு பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள் ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டது.
சமீபத்தில் மாஸ்டர் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. வரும் ஏப்ரல் 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
.
#Vijay’s master anntha kanne paththakka lyric video
#Aniruth #yuvan Shankar Raja #Vingnesh sivan #Vijaysethupathi #Lokesh Kanagaraj