Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

விசு மறைவு: ரஜினி, சரத் இரங்கல்

கொரோனா பயத்தால் விமானம் ரத்தானதால் 3 மகள்களும் அமெரிக்காவில் தவிப்பு..

மணல் கயிறு. திருமதி ஒரு வெகுமதி, சம்சாரம் அது மின்சாரம் என பெண்களை பெருமைப்படுத்தும் படங் களை இயக்கி அளித்தவர் விசு. குணசித்ர நடிப்பிலும் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றவர்.
கடந்த சில காலமாகவே உடல் நலமில்லா மல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் நேற்று மாலை காலமானார்.  
விசு மறைவுக்கு ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள் ளார்.
‘என் அன்பிற்கும் மரியாதைக் கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத் தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர் களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என ரஜினி கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்த னது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என கலையுலகில் பன்முகத் தன்மையுடன் சிறந்து விளங்கிய வரான விசு மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
சமுதாய கருத்துகளை நகைச் சுவையாக, நாகரீகமாக எடுத்துச் சொல்வதில் ஆற்றல்மிக்கவர் விசு. தனது திரைப்படங் களின் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பாச சிக்கல்களை நகைச்சுவை உணர்வோடும், எதார்த்தமாகவும், அழுத்த மாகவும் எடுத்து கூறியவர். சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு அளிப்பதில் வல்லவர்.
அவரது இழப்பு நாடகம், திரைத் துறை, சின்னத்திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் ஏராளமான நடிகர் நடிகைகள் இரங்கல்
டைரக்டர் விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விசுவின் மறைவுக்கு திரையுல கினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் அவரது மூன்று மகள்களும் அமெரிக்கா வில் இருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டி ருப்பதால் அவர்களால் தந்தை யின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

#Rajinikanth, Sarathkumar  condoles for Visu Demise. 

Related posts

’இந்தியன் 2’ ஷுட்டிங் விபத்து : இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 கோடி..

Jai Chandran

ஸ்மைல் மேன் பட விமர்சனம்

Jai Chandran

Actor Karthi wished National Award Winners

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend