Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வடக்கு தெற்கு கதையுடன் ’தந்தூரி இட்லி’

வடக்கு தெற்கு கதையுடன் ’தந்தூரி இட்லி’

அஜய் பிரசாத் – அவந்திகா மிஷ்ரா ஜோடி..

எம்.எக்ஸ்.பிளேயர் வழங்கும் முற்றிலும் புதுமையான நகைச்சுவை கலந்த காதல்
தொடர் தந்தூரி இட்லி. இதன் அனைத்து பகுதிகளையும் தற்போது இலவசமாகப் பார்க்கலாம். வடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. ஒரு வட இந்தியப் பெண் சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிக்கு வருகிறார். தென் இந்திய அலுவலக நடைமுறைகள் அந்தப் பெண்ணை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் தந்தூரி இட்லி.
முன்னணியிலிருக்கும் பொழுதுபோக்கு ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர், சாதாரணமான ஒரு கதையை அசாதாரணமாக முறையில் சுவைபட வழங்குகிறது. நகைச் சுவை கலந்த இந்தக் காதல் கதையை தேவன்ஷு ஆர்யா இயக்கியிருக்கிறார்.
தந்தூரி இட்லி தொடரில் சிம்ரன் என்ற வட இந்தியப் பெண் வேடத்தில் நடித்திருக்கும்
அவந்திகா மிஷ்ரா கூறுகிறார்…
இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து அனுபவித்து நடித்தேன்.
குறிப்பாக இந்தத் தொடரின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. காரணம்
பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி தொடரைப் பார்க்க ஈர்க்கும் தலைப்பு இது.
டில்லியிலிருந்து பணி நிமித்தமாக சென்னை வரும் சிம்ரன் என்ற பெண் வேடத்தில் நான்
நடித்திருக்கிறேன். தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில் மக்களுக்கு மன நிறைவைத்
தரும் பொழுதுபோக்கு தேவை. இதை தந்தூரி இட்லி சரியாகப் பூர்த்தி செய்யும்.
சிம்ரன் மீது காதல் வசப்படும் செல்வம் என்ற சென்னை இளைஞன் வேடத்தில் நடிக்கும்
அஜய் பிரசாத் கூறுகிறார்…

தந்தூரி இட்லி நகைச்சுவைத் தொடர் முழுமையாக ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில்
முழ்கச் செய்யும். தந்தூரி இட்லி இதை சரியாகச் செய்திருக்கிறது.

ஆறு பகுதிகளைக் கொண்ட இந்த மென் தொடரை இயக்கியிருக்கும் தேவன்ஷு ஆர்யா
கூறுகிறார்….சினிமா மற்றும் தொலைக் காட்சியில் சொல்ல முடியாத வித்தியாசமான கதைகளை ஆக்கப்பூர்வமான சுதந்திரத்துடன் சொல்ல இடமளிப்பவைதான் இணைய தொடர்கள்.இந்தத் தொடரில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் இனிய அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. இதேபோல் பார்வையாளர்களுக்கும் இது மகிழ்சியான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.

அஜய் பிரசாத், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும்
இத்தொடரில் விகால்ஸ் விக்ரம், வினோத் குமார், வாட்ஸப் மணி, சுஹாசினி சஞ்சீவ்
மற்றும் மிர்ச்சி சபா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
#thanthooriitly #ajaypirasath #avanthika #devanshooariya #MXplayer
#தந்தூரிஇட்லி #அஜய்பிரசத் #அவந்திகா #தேவன்சூஆர்யா

Related posts

4th single Sengaandhale from Aranmanai3 on Wednesday

Jai Chandran

VeeramaeVaagaiSoodum Running successfully in cinemas near you

Jai Chandran

எளிய மக்களின் பசி போக்க நாடு முழுதும் இளைஞர் சைக்கிளில் பிரசாரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend